Published:Updated:

`அந்த ஊரைப் பார்த்ததும் அதிர்ந்துடீங்களா..?’ - அமைச்சரின் லண்டன் விசிட்டை கலாய்த்த ராமதாஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`அந்த ஊரைப் பார்த்ததும் அதிர்ந்துடீங்களா..?’ - அமைச்சரின் லண்டன் விசிட்டை கலாய்த்த ராமதாஸ்
`அந்த ஊரைப் பார்த்ததும் அதிர்ந்துடீங்களா..?’ - அமைச்சரின் லண்டன் விசிட்டை கலாய்த்த ராமதாஸ்

`அந்த ஊரைப் பார்த்ததும் அதிர்ந்துடீங்களா..?’ - அமைச்சரின் லண்டன் விசிட்டை கலாய்த்த ராமதாஸ்

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். 

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் சென்னையில் மின்சாரப் பேருந்துகளை இயக்கவுள்ளதாகச் சமீபகாலமாக தமிழக அரசு கூறிவருகிறது. இதற்காகக் கடந்த மார்ச் மாதம் தமிழக போக்குவரத்துத் துறைக்கும், லண்டன் C 40 முகமைக்குமிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் முதல்கட்டமாக மின்சாரப் பேருந்துகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் லண்டன் சென்றுள்ளார். லண்டன் மின்சாரப் பேருந்து, பணிமனையை பார்வையிட்ட அவர் C-40 அமைப்புடன் ஆலோசனை மேற்கொண்டார். அவருடன் ஆலோசனையில் தமிழக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதுகுறித்து தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது. 

இதற்கிடையே, தமிழக அமைச்சரின் லண்டன் விசிட்டை விமர்சித்துள்ளார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``லண்டனில் பேருந்துகளை விஜயபாஸ்கர் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தாராம். அங்கு ஒரு பேருந்து கூட ஒழுகவில்லையாம்; ஒரு பேருந்தின் மேற்கூரை கூட காற்றில் பறக்கவில்லையாம்!' எனக் கிண்டல் அடித்துள்ளார்.

தமிழகத்தில் பேருந்துகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகப் பலமுறை குற்றம் சாட்டியிருந்தார் ராமதாஸ். ஆனால், அவற்றைச் சீர்செய்யாமல் தற்போது மின்சாரப் பேருந்துகள் வாங்கவுள்ளது. இதைக் கண்டித்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதேபோல் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என அமைச்சர் தங்கமணி கூறியதை மேற்கோள்காட்டி வெளியிட்ட பதிவில், ``ஊர் முழுக்க கடன் வாங்கி சேர்த்தவன் உலகத்திலேயே நான் தான் பணக்காரன் என்று கூறுவதும், நம்ம மந்திரி புழுகுவதும் ஒன்றுதான்" என விமர்சித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு