Published:Updated:

`தண்ணீர் பஞ்சம் வந்துடுச்சு; கோதாவரி - பாலாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேத்துங்க’ - ஜி.கே. மணி

கோதாவரி - பாலாறு இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. மணி, “காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிறையத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை. வேலையில் இருக்கும் தொழிலாளர்களை நிரந்தப் படுத்தாமல், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைத்திருக்கிறார்கள். இருக்கும் தொழிற்சாலைகளையும் மூடிக்கொண்டுவருகிறார்கள். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தமிழக அரசு தொழில் வளர்ச்சிக்குச் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ளவர்களை மாநில அரசும் ஆளுநரும் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது. சோனியா காந்தியும் அவர்களை விடுவிக்கலாம் எனக் கருத்து தெரிவித்திருக்கிறார். இவர்களைத் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலைசெய்திருக்க வேண்டும். ஆளுநர் காலம் தாழ்த்துவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. உடனடியாக ஆளுநர் 7 பேரையும் விடுதலைசெய்ய உத்தரவிட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிருஷ்ணா-கோதாவரி இணைப்பால் ஆந்திர மக்கள் நீர் பற்றாக் குறைவு இல்லாத அளவுக்குத் தன்னிறைவு பெற்றிருக்கிறார்கள். பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அறிவிப்பு செய்து ஓராண்டு ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதனால், பாலாற்றுப் பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவதன்மூலம் அருகில் உள்ள பெரிய ஏரிகளில் நீரைத் தேக்க முடியும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயிகளும் பயன்பெறுவார்கள். தமிழகத்துக்கு வரும் பாலாற்று நீரை ஆந்திராவில் அணைகட்டித் தடுத்துவிட்டார்கள். மத்திய அரசு கோதாவரி-பாலாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism