Published:Updated:

`மன்னிப்பை அறிக்கையாக வெளியிடுங்கள்!’ - கருணாஸ் மீது பாயும் `ராக்கெட்’ ராஜா

`மன்னிப்பை அறிக்கையாக வெளியிடுங்கள்!’ - கருணாஸ் மீது பாயும் `ராக்கெட்’ ராஜா

`மன்னிப்பை அறிக்கையாக வெளியிடுங்கள்!’ - கருணாஸ் மீது பாயும் `ராக்கெட்’ ராஜா

`மன்னிப்பை அறிக்கையாக வெளியிடுங்கள்!’ - கருணாஸ் மீது பாயும் `ராக்கெட்’ ராஜா

`மன்னிப்பை அறிக்கையாக வெளியிடுங்கள்!’ - கருணாஸ் மீது பாயும் `ராக்கெட்’ ராஜா

Published:Updated:
`மன்னிப்பை அறிக்கையாக வெளியிடுங்கள்!’ - கருணாஸ் மீது பாயும் `ராக்கெட்’ ராஜா

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை விமர்சித்ததாக நடிகர் கருணாஸ் மீது விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் ராக்கெட் ராஜா, நடிகர் கருணாஸிடம் போனில் பேசியுள்ளார். அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதை தெரிந்துகொள்ள ராக்கெட் ராஜாவை தொடர்பு கொண்டோம். அப்போது அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

 நடிகர் கருணாஸிடம் நீங்கள் என்ன பேசினீர்கள்?

 ``எங்களின் சமுதாயத்தைத் தரக்குறைவாக நடிகர் கருணாஸ் பேசியதும் அவருக்கு எதிரான கண்டன குரல் எழுந்தது. அதை அப்படியே விட்டுவிட்டால் கலவரமாக மாறும் சூழல் நிலவியது. இதனால்தான் நடிகர் கருணாஸ நான் போனில் தொடர்புகொண்டு பேசினேன். அப்போது அவர், பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். அந்தத் தகவலை சமுதாயத் தலைவர்களிடமும் சங்க நிர்வாகிகளிடமும் தெரிவித்தோம். இதனால் அந்தப் பிரச்னை அமைதியானது." 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடிகர் கருணாஸ் வீட்டை முற்றுகையிடப் போவதாகத் தகவல் உள்ளதே? 

 ``நடிகர் கருணாஸ் என்னிடம்தான் மன்னிப்புக் கேட்டார். அந்தத் தகவலையும் தெரிவித்துவிட்டேன். மீடியாக்கள் மூலமாகவும் தன்னுடைய வருத்தத்தை நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். எங்கள் சமுதாய மக்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால் மன்னிப்பை அவர் அறிக்கையாக வெளியிட்டு இருந்தால் சுமுகமாக எல்லாம் முடிந்திருக்கும். நடிகர் கருணாஸ், பேசியது முற்றிலும் தவறு. அவர் அரசியலுக்காக அப்படி பேசியிருக்கிறார். ஆனால், நாங்கள் அவரிடம் விளக்கத்தைத்தான் கேட்டோம். சமீபகாலமாகத்தான், தென்மாவட்டங்களில் ஜாதி கலவரம் ஏற்படாமல் இருக்கிறது. நடிகர் கருணாஸின் இந்தப் பேச்சால் மீண்டும் கலவரம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதை நாங்கள் தடுத்துள்ளோம். விரைவில் அவரிடமிருந்து அறிக்கை வரும் என்று எதிர்பார்க்கிறோம்." 

 நடிகர் கருணாஸ் உங்களிடம் மன்னிப்புக் கேட்டாரா?

`` நான் போனில் பேசியதும் இந்தப் பிரச்னையின் வீரியத்தை அவர் புரிந்துகொண்டார். அப்போது, உங்களைத் தெரியாதா பிரதர் என்று கருணாஸ் கூறினார். உடனே, நான் உங்களின் விளக்கத்தைதான் நான் கேட்க போன் செய்தேன். உங்களுக்கு கண்டனம் தெரிவிக்க நான் போன் செய்யவில்லை என்று தெளிவாகக் கூறினேன். உடனே, கருணாஸ் மன்னிப்புக் கேட்டார். அவர், மன்னிப்புக் கேட்கும்போது அதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். இல்லையெனில் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துவிடும். இதனால் எங்கள் சமுதாயத்தில் கருணாஸுக்கு எதிரான கண்டன குரல் கொடுத்தவர்களிடம் ஆலோசித்துள்ளோம். இருப்பினும், மன்னிப்பை கருணாஸ் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று சமுதாயத் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்."