Published:Updated:

ரஃபேல் விமான ஒப்பந்தம்: இந்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

ரஃபேல் விமான ஒப்பந்தம்: இந்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!
ரஃபேல் விமான ஒப்பந்தம்: இந்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபரின் கருத்துகளை வைத்துக் கொண்டு, தேவையற்ற சர்ச்சைகள் கிளப்பப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா, பிரான்ஸ் நாட்டின் விமான தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது செய்யப்பட்ட ஒப்பந்தத்தை விடவும், மிக அதிக விலை கொடுத்து தற்போது பி.ஜே.பி. தலைமையிலான மோடி அரசு விமானங்களை வாங்குவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 

இந்த நிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே, இந்தியாவின் ஒப்பந்தம் தொடர்பாக சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அது சில செய்தித்தாள்களில் வெளியாகி இருந்தது. ஆனால், அந்த கருத்தை மத்திய அரசு மறுத்துள்ளது. 

மேலும் பிரான்ஸ் முன்னாள் அதிபரின் கருத்தை அந்நாட்டு அரசும் மறுத்துவிட்டது. இதனிடையே இந்திய பாதுகாப்பு அமைச்சகம், தேவையின்றி ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை கிளப்பப்படுவதாகக் கூறியுள்ளது. பிரான்ஸ் முன்னாள் அதிபரின் கருத்து தொடர்பாக தேவையில்லாத விளக்கங்கள் கோரப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. எந்தவொரு நிறுவனத்தையும் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இடம்பெறச் செய்ய இந்தியா வலியுறுத்தவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.