Published:Updated:

‘ரஃபேல் ஒப்பந்தம்’- ராகுல் குற்றச்சாட்டிற்கு பா.ஜ.க பதிலடி

‘ரஃபேல் ஒப்பந்தம்’- ராகுல் குற்றச்சாட்டிற்கு பா.ஜ.க பதிலடி
‘ரஃபேல் ஒப்பந்தம்’- ராகுல் குற்றச்சாட்டிற்கு பா.ஜ.க பதிலடி

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானி குழுமம் இடம் பெற்றிருந்தது என பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா, பிரான்ஸ் நாட்டின் விமான தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது செய்யப்பட்ட ஒப்பந்தத்தை விடவும், மிக அதிக விலை கொடுத்து தற்போது பி.ஜே.பி. தலைமையிலான மோடி அரசு விமானங்களை வாங்குவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 

பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே, இந்தியாவின் ஒப்பந்தம் தொடர்பாக சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.இப்படியான நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், `பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனில் அம்பானி ஆகியோர் இணைந்து, இந்திய பாதுகாப்பு படையில் ரூ.1.30 லட்சம் கோடி அளவில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி உள்ளனர்.இந்தியாவின் ஆன்மாவுக்குத் துரோகம் இழைத்துவிட்டீர்கள்' எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றஞ்சாட்டுகள் குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ‘ராகுல் காந்திக்கு இங்கு நான் பதிலளிக்கிறேன். ராகுல்காந்தியை தவிர கடந்த காலங்களில் எந்தக் கட்சி தலைவரும் பிரதமரை தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதில்லை. ராகுல்காந்திக்கு தலைவர் பதவிக்கான தகுதி அல்லது திறன் இல்லை. குடும்பத்தின் காரணமாக அவர் அந்தப்பதவியில் இருக்கிறார். நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் தாக்கல் செய்யபப்ட்டுள்ள குற்றப்பத்திரிகையில் ராகுல் மற்றும் அவரது தாயார் பெயர் உள்ளது. போர்பஸ் ஊழல், ராபர்ட் வதோரா விவகாரங்களில் அமைதியாக இருக்கும் ராகுலிடம் என்ன எதிர்பார்க்க முடியும். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்திலேயே  ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானி குழுமம் இடம் பெற்றிருந்தது.’என்றார்.