Published:Updated:

`உலகின் எந்த நாடும் செயல்படுத்தாதத் திட்டம்!’ - `ஆயுஷ்மான் பாரத்’ குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

`உலகின் எந்த நாடும் செயல்படுத்தாதத் திட்டம்!’ - `ஆயுஷ்மான் பாரத்’ குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
`உலகின் எந்த நாடும் செயல்படுத்தாதத் திட்டம்!’ - `ஆயுஷ்மான் பாரத்’ குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

`உலகின் எந்த நாடும் செயல்படுத்தாதத் திட்டம்!’ - `ஆயுஷ்மான் பாரத்’ குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

`ஆயுஷ்மான் பாரத்' என்ற புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் 10.74 கோடி ஏழைக் குடும்பங்கள் பயனடைவார்கள் என மோடி தெரிவித்துள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் மோடி தேசிய மருத்துவக் காப்பீடு திட்டமான `ஆயுஷ்மான் பாரத்' என்ற புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். உலகிலேயே, ஒரு நாட்டு அரசின் சார்பாக அந்நாட்டு மக்களின் மருத்துவ சேவைக்காக தொடங்கப்பட்ட மிகப்பெரிய திட்டம் இதுவாகும். இந்தக் காப்பீடு திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 50 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு, இத்திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு வயது வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. தமிழகம், ஆந்திரா உட்பட நாட்டில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்றுமுதல் திட்டம் அமலுக்கு வருகிறது. 

திட்டத்தைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசுகையில், `உலகில் எந்த ஒரு நாடும் செயல்படுத்தப்படாத திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. நாட்டில் சாமானிய மக்களும் சிறந்த மருத்துவ வசதியைப் பெறவேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட திட்டம்தான் ஆயுஷ்மான் பாரத் திட்டம். இனி, ஏழை மக்கள் தங்களின் மருத்துவச் செலவுக்காக கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மத்திய அரசின் 60 சதவிகித பங்களிப்புடன், மீதமுள்ளவை மாநில அரசின் பங்களிப்புடன் செயல்பட உள்ளது. சமூகம் உள்ளிட்ட மக்களின் ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையில் தொடங்கப்பட்டது அல்ல. அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறவேண்டி தொடங்கப்பட்ட திட்டம் இதுவாகும். இதனால் பயனடையும் மக்களின் எண்ணிக்கை கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையைச் சேர்த்தால் வரும் கூட்டுத் தொகைக்கு நிகரானது’’ என்றார். மத்திய அரசின் இந்த திட்டத்தில் தெலுங்கானா, ஒடிசா, டெல்லி, கேரளா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த கட்டுரைக்கு