``நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம்” - புதுச்சேரி பா.ஜ.க-வினரின் புதுயுக்தி | "Mobile MLA office " Puducherry BJP is in new route

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (24/09/2018)

கடைசி தொடர்பு:14:40 (24/09/2018)

``நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம்” - புதுச்சேரி பா.ஜ.க-வினரின் புதுயுக்தி

புதுச்சேரி மாநில பா.ஜ.க, ``நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம்” என்ற புதிய முயற்சியைக் கையில் எடுத்து களம் இறங்கியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தின் பா.ஜ.க தலைவரும், நியமன எம்.எல்.ஏ-க்களில் ஒருவருமான சாமிநாதன், 2016 சட்டமன்றத் தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். அதன்பிறகு, மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசால் நேரடியாக எம்.எல்.ஏ-வாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர், 'நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி, தனது லாஸ்பேட்டை தொகுதி வீதிகளில் மக்களிடம் குறைகேட்டுவருகிறார்.

பாஜக

”எம்.எல்.ஏ என்பவர்கள் மக்களின் பிரதிநிதிகள். அவர்கள் மக்களைத் தேடி செல்ல வேண்டும் என்பதற்காகத்தான், முதல் முறையாக நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகத்தை ஏற்படுத்தியிருக்கிறேன். மத்திய அரசு விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, செல்வ மகள் சேமிப்புக் கணக்கு என மக்களுக்கான பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறது. ஆனால், அவற்றை மாநில அரசு நிறைவேற்றுவதில்லை. தற்போது அவற்றை மக்களிடம் நேரடியாகக் கொண்டுசேர்க்கிறோம். அதேபோல ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றங்கள் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை அளிப்பதோடு, அதற்கான வழி முறைகளையும் அவர்களுக்குச் சொல்கிறோம். முதல் நாளிலேயே 50-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம் மூலம் பயன்பெற்றார்கள்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close