Published:Updated:

`இது அவமானம்! என் நாடு எங்கே?' - மத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் நடிகர் சித்தார்த்

`இது அவமானம்! என் நாடு எங்கே?' - மத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் நடிகர் சித்தார்த்
`இது அவமானம்! என் நாடு எங்கே?' - மத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் நடிகர் சித்தார்த்

சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச் சென்றுள்ள மற்றொரு தொழிலதிபர் குறித்து, நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் சந்தேசரா. மருந்துக் கம்பெனி நடத்தி வரும் இவர், ஆந்திரா வங்கியில் ரூ.5,000 கோடி வாங்கினார். ஆனால், அதை அவர் திருப்பிச் செலுத்தவில்லை. தலைமறைவான சந்தேசரா மீது அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. இவரது மருந்துக் கம்பெனியின் 4,700 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கப்பிரிவு முடக்கியது. அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, அவரை காவல்துறை தேடிவருகிறது.

அவர் தன் குடும்பத்துடன்  நைஜீரியா நாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரை இந்தியா கொண்டுவருவதில் சிக்கல் நிலவிவருகிறது. இது தொடர்பான செய்தியை சுட்டிக்காட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் சித்தார்த், ``மற்றொரு குஜராத்தியும், சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளார். நீங்கள் கறுப்புப் பணத்தை இந்தியா கொண்டுவருவதாக தானே சொன்னீர்கள்? ஆனால், இதற்கு அப்படியே எதிராக அல்லவா நடைபெற்று வருகிறது. மக்களின் பணமல்லவா மதிப்பு நீக்கத்துக்கு உட்படுத்தப்படுகிறது. அவமானம்; என்நாடு எங்கே'' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.