Published:Updated:

இலங்கையில் தமிழ் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்

இலங்கையில் தமிழ் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
இலங்கையில் தமிழ் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
இலங்கையில் தமிழ் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்

கொழும்பு: யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் உதயன் பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று அதிகாலை 4 மணி அளவில், யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியா தெருவில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய குண்டர்கள் அதிரடியாக நுழைந்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, அங்கு பணியாற்றியவர்களை அடித்து விரட்டி விட்டு, அச்சு இயந்திரங்களை உடைத்து நொறுக்கி தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.

2006ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி இதே உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் இலங்கை ராணுவத்தினர் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதில் 2 ஊழியர்கள் கொல்லப்பட்டனர், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

##~~##
இந்த யாழ்ப் பகுதி இலங்கை ராணுவத்தின் ஜெனரல் ஹத்ரு சின்கா கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவர் தனிக் கூலிப்படை வைத்து அக்கிரமம் செய்வதாக முன்னாள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரம சின்கா அண்மையில்தான் குற்றம் சாட்டினார். நேற்று இலங்கை நாடாளுமன்றத்திலும் இதுபற்றி குற்றம் சாட்டியுள்ளார்.
உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரான சரவண பவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இன்று நடந்த தாக்குதலை இலங்கை ராணுவத்தினரே செய்துள்ளனர். அண்மையில்தான் கிளிநொச்சியில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகம் இலங்கைக்காரர்களால் தாக்கப்பட்டது. அதுவும் ராணுவத்தினரின் வன்முறையாகவே தெரிகிறது. கிளிநொச்சி அலுவலகத்துக்கு இலங்கை அரசிடம் பாதுகாப்புக் கேட்டும் இதுவரை கொடுக்கப்படவில்லை.
தமிழர்களின் பத்திரிகை அலுவலகங்களை தீயிட்டுக் கொளுத்துவதும், இயந்திரத் துப்பாக்கிகளால் சுடுவதும் இலங்கை ராணுவத்தினுடைய கொடுஞ்செயலே ஆகும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பத்திரிகை அலுவலகத்துக்கே இந்த நிலைமை என்றால், தமிழ் ஈழத்தில் வாழும் தமிழர்கள் உயிருக்கும், உடமைக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை என்பதும், இலங்கை ராணுவத்தின் அராஜகம் தமிழ் ஈழத்தில் தொடர்ந்து தலைவிரித்தாடுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர் தாயகத்திலிருந்து இலங்கை ராணுவமும் போலீசும் முற்றாக வெளியேற்றப்பட்டாக வேண்டும். ஐ.நா. மன்றமும், அனைத்துலக நாடுகளும் அந்த நிலைமையை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
இலங்கைத் தீவில், தமிழ் ஈழத்தில் உள்நாட்டுப் பத்திரிகைகளோ, தொண்டு நிறுவனங்களோ சுதந்திரமாக செயல்படவே முடியாது. மனித உரிமைகள் சிங்களவரால் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன என்பதை அனைத்துலக சமுதயாம் எண்ணிப் பார்த்து, ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்தும் இலங்கை அரசின் இக்கொடுமை இன்னும் தொடர்வதை தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.