Published:Updated:

கருணாஸை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனு..!

சி.வெற்றிவேல்

காவல் துறை சார்பில் கருணாஸை ஒருவாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருணாஸை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனு..!
கருணாஸை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனு..!

ள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக முதல்வர் மற்றும் காவல் துறையை அவதூறாகப் பேசிய கருணாஸை காவலில் எடுத்து ஒரு வாரம் விசாரணை செய்ய, காவல் துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ், கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வர் தன்னைக் கண்டு அஞ்சுவதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, `சட்டையைக் கழற்றிவிட்டு வந்து நேருக்கு நேர் என்னுடன் மோதத் தயாரா?' எனப் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கருணாஸ் நேருக்கு நேர் சவால் விடுத்தார். மேலும், சாதி ரீதியாகவும், கூவத்தூரை அடையாளம் காட்டியது நான்தான் எனவும் பல்வேறு சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்தார் கருணாஸ். அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது தொடர்பாக, கருணாஸ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளில் போலீஸார் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு கருணாஸ், காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட கருணாஸ், புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

கருணாஸ் தரப்பில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்க, காவல் துறை சார்பில் கருணாஸை ஒருவாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு வர இருக்கின்றன.