வெளியிடப்பட்ட நேரம்: 03:01 (26/09/2018)

கடைசி தொடர்பு:03:01 (26/09/2018)

'100 ஸ்டாலின், 100 தினகரன் வந்தாலும் ஆட்சியை ஒன்றும் செய்யமுடியாது' - அமைச்சர் ஆவேசம்

தஞ்சாவூரில் அதிமுக சார்பில் நடந்த பொதுகூட்டத்தில் ஊழலை கண்டு பிடித்ததே திமுக தான் உணவு, நிலக்கரி என அனைத்திலும் ஊழல் செய்தது திமுகதான்.ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் எங்க ஆட்சியை லஞ்ச ஆட்சி,குற்றம் புரியும் ஆட்சி என தவறாக பேசி வருகிறார்.இதே போல் தப்பாக பேசி வந்தால் நாக்கை அறுத்து விடுவேன் என அமைச்சர் துரக்கண்ணு பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஊழலைக் கண்டு பிடித்ததே தி.மு.க தான். உணவு, நிலக்கரி என அனைத்திலும் ஊழல் செய்தது தி.மு.கதான். ஆனால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எங்க ஆட்சியை லஞ்ச ஆட்சி, குற்றம் புரியும் ஆட்சி என தவறாக பேசி வருகிறார். இதே போல் தப்பாக பேசி வந்தால் நாக்கை அறுத்து விடுவேன் என அமைச்சர் துரைக்கண்ணு பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தஞ்சாவூரில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்திற்கு தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி அரசு உதவி செய்தது. அதனாலேயே பல்லாயிக்ரகணக்கான ஈழதமிழர்கள் படுகொலை செய்யபட்டார்கள். எனவே அவர்களை போர்குற்ற விசாரணைக்கு உட்ப்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, 'ஈழப்போரில் போர் குற்றம் புரிந்து ஒன்றரை லட்சம் தமிழர்கள் பலியாவதற்கு காரணமாக இருந்தது தி.மு.க. குறுவைத் தொகுப்பு திட்டம், வறட்சி நிவாரணம் என பல திட்டங்களில் நிதியை ஒதுக்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது அ.தி.மு.க அரசு. ஊழலைக் கண்டு பிடித்ததே தி.மு.க தான். உணவு, நிலக்கரி என அனைத்திலும் ஊழல் செய்தது தி.முக.தான். ஆனால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்  எங்க ஆட்சியை லஞ்ச ஆட்சி, குற்றம் புரியும் ஆட்சி என தவறாக பேசி வருகிறார். இதே போல் தப்பாக பேசி வந்தால் நாக்கை அறுத்து விடுவேன் அது யாராக இருந்தாலும். இன்று தினகரன் குடுகுடுப்க்பைகாரன் போல் இன்று ஆட்சி போய் விடும். கலைந்து விடும். நாளை ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்கிறார் எந்தக் கொம்பனாலும் இந்த ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஒரு வாரத்திற்கு முன் இந்தியா வந்த ராஜபக்‌ஷே இலங்கையில் நடந்த போரில் இந்திய அரசு பெருமளவில் உதவி செய்தது. அதனால் தான் ஈழத்தில் பிராபகரன் உட்பட ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தோம் என குற்றம் செய்தவரே வாக்கு மூலம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். இதற்கு என்ன சொல்ல போகிறது திமுக. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி  நினைத்திருந்தால் போரை  நிறுத்தியிருக்கலாம். 2004-ல் காங்கிரஸ் கூட்டணியில் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க அமைச்சர் பதவி வாங்குவதற்காக காட்டிய அக்கறையை ஈழத்தமிழர்கள் விஷயத்தில் காட்டவிலை. சிங்களர்களுக்கு என்ன உரிமை உண்டோ அவை ஈழத்தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டும் என குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. ஈழப்போரின் போது இந்தியா ஹெலிகாப்டர், ரேடார் கருவி போன்றவற்றோடு நிதி உதவியும் செய்கிறது என வைகோ உள்ளிட்டவர்கள் தினமும் பேசி வந்தார்கள் கடும் போராட்டம் நடத்தி வந்தார்கள்.

ஆனால் இன்று வைகோ அது வேற வாய். இது வேற வாய் என்பது போல் வாய் மூடி மவுனம் காப்பதோடு மு.க.ஸ்டாலினை முதல்வர்  ஆக்குவேன் என கூறி வருகிறார். ஈழ விஷயத்தில் தி.மு.க செய்தது என்ன என வைகோ மனதிற்கு தெரியும். அப்போது துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் ஈழப்போர் குறித்து என்ன செய்தார் என வைகோ எங்களோடு பகிரங்கமாக நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? 2013-ம் ஆண்டிலேயே ராஜபக்‌ஷே சர்வதேச குற்றவாளி. அவரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தீர்மானம் போட்டவர் ஜெயலலிதா. இப்போது நாங்கள் போருக்கு துணையாக இருந்த மு.க.ஸ்டாலின், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் சர்வதேச நீதிமன்றத்தில்  நிறுத்தி குற்றவாளி என தீர்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இன்று மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க அரசு ஊழல் அரசு என்றும், அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள் என்றும் தினம்தோறும் ஒரு அறிக்கை விடுவதோடு முதலமைச்சர் ஆகலாம் என கனவு கண்டு வருகிறார். 100 ஸ்டாலின் 100 தினகரன் வந்தாலும் இன்னும் 100 ஆண்டு காலம் இந்த கழகத்தை ஆட்டவோ அசைக்கவோ முடியாது' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க