Published:Updated:

தொகுதி எம்.எல்.ஏ-வுக்கு இளைஞர்கள் கொடுத்த அதிர்ச்சி! - அடுத்தடுத்த நாளில் கிடைத்த ஆச்சர்ய தீர்வு

தொகுதி எம்.எல்.ஏ-வுக்கு இளைஞர்கள் கொடுத்த அதிர்ச்சி! - அடுத்தடுத்த நாளில் கிடைத்த ஆச்சர்ய தீர்வு
News
தொகுதி எம்.எல்.ஏ-வுக்கு இளைஞர்கள் கொடுத்த அதிர்ச்சி! - அடுத்தடுத்த நாளில் கிடைத்த ஆச்சர்ய தீர்வு

தொகுதி எம்.எல்.ஏ-வுக்கு இளைஞர்கள் கொடுத்த அதிர்ச்சி! - அடுத்தடுத்த நாளில் கிடைத்த ஆச்சர்ய தீர்வு

கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி தி.மு.க எம்.எல்.ஏவான ராமர் தொகுதி பிரச்னைகளைத் தீர்ப்பதில் பெரிய அக்கறை காட்டாமல் இருந்தாராம். அவரைத் தங்கள் வழிக்கு கொண்டு வந்ததோடு, தொகுதி பிரச்னைகள் குறித்து உடனுக்குடன் ஆய்வு பண்ணும் அளவுக்கு எம்.எல்.ஏ ராமரை அப்பகுதி இளைஞர்கள் மாற்றி அதிசயிக்க வைத்திருக்கிறார்கள்.

`கரூர் மாவட்ட எம்.எல்.ஏவாக இருக்கும் ராமர் தொகுதி பக்கமே வருவதில்லை. மக்களுக்கு அடிப்படை பிரச்னைகளைக்கூட தீர்க்க முயல்வதில்லை. மனு கொடுக்க பொதுமக்கள் போனா, எம்.எல்.ஏ அலுவலகம் 365 நாள்களும் பூட்டியே கிடக்கு' என்று தொகுதி மக்கள் புலம்பி வந்தார்கள். அவரை வழிக்குக் கொண்டு வர நினைத்த அந்தப் பகுதி இளைஞர்கள் சிலர், ஒரு மாதத்துக்கு முன்பு தொகுதி சம்பந்தமான மனுவோடு எம்.எல்.ஏ அலுவலகத்துக்குப் போனார்கள். அங்கே அவர் இல்லை. போன் அடித்தும் அவர் எடுக்கவில்லை. உடனே, கையோடு கொண்டு போயிருந்த மனுவை சுவற்றில் ஒட்டி வைத்து, 'சுவரே எம்.எல்.ஏ வந்ததும் இந்த மனுவை கொடுத்துடு' என்றபடி வந்தனர். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனால், ஜெர்க்கான எம்.எல்.ஏ ராமரிடம் உடனே மாற்றம் தெரிந்தது. அதன்பிறகு, எம்.எல்.ஏ அலுவலகத்தில் மனு வாங்க ஆளை நியமித்தார். அடிக்கடி அலுவலகத்துக்கு வரவும் ஆரம்பித்தார். மக்களின் குறைகளையும் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தார். இந்த நிலையில், அதே இளைஞர்கள் 8 கோரிக்கைகள் அடங்கிய மனுவோடு ராமரைப் பார்க்கச் சென்றிருக்கின்றனர். அவர்களுக்கு காபி கொடுத்து அமரவைத்து, இரண்டு மணி நேரம் பேசி இருக்கிறார். அதோடு, சில கோரிக்கைகளைத் தீர்க்க சம்பந்தப்பட்ட இடத்துக்கே இளைஞர்கள் சகிதம் போய் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்த இளைஞர்கள், ``முன்னாடி எல்லாம் எம்.எல்.ஏவைப் பார்க்கவே முடியாது. நாங்க போன் போட்டாலும் எடுக்கமாட்டார். ஆனால், அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டியதில் இருந்து அவர் மாறிட்டார். சில தினங்களுக்கு முன்பு 8 கோரிக்கைகளோடு அவரைப் பார்க்கப் போனோம். எங்களுக்கு காபி கொடுத்து அமர வைத்து 2 மணி நேரம் பேசினார். எங்க கோரிக்கைகளை அவரே வாசித்து, 'இந்த விஷயம் பற்றி சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன்', 'இந்த விஷயம் பரிசீலனையில் இருக்கு'ன்னு 8 கோரிக்கைகளுக்கும் என்ன ஸ்டேட்டஸ்ங்கிறதைச் சொன்னார். நாங்க அசந்து போனோம்.

மக்கள் பயன்படுத்துற தனியார் பாதை சம்பந்தமான கோரிக்கையைப் படிச்சுட்டு, அந்த இடத்தின் உரிமையாளரை அவரே அழைத்துப் பேசினார். 'சொந்தப் பணத்தில் 15 லட்சம் வேணும்னாலும் தர்றேன். மக்களுக்குப் பாதையை திறந்து விடுங்க'ன்னு கேட்டார். 'அது கோர்ட்டு உத்தரவைப் பொறுத்துதான் செய்ய முடியும்'ன்னு பாதை உரிமையாளர் சொன்னார். பூங்கா கேட்டதுக்கு, 'எந்த இடத்துல அமைக்கனும்ன்னு மட்டும் சொல்லுங்க. நான் பார்த்துக்கிறேன்'ன்னார். 'நீங்க தொகுதி முழுக்க எந்தப் பிரச்னை இருந்தாலும் சொல்லுங்க. சேர்ந்தே போய் சரிபண்ணுவோம்'ன்னார். அதோடு,'நான் சிறப்பா செயல்படதான் நினைக்கிறேன். ஆனா, வர்ற எம்.எல்.ஏ தேர்தல்ல யார் சீட்டு வாங்குறதுங்கிற போட்டியில எனக்கு சொந்தக் கட்சியினரே ஒத்துழைப்பு தருவதில்லை. பார்த்தீங்களா என் பின்னே ஒரு தி.மு.க தொண்டர்கூட இல்லை. நான் வேற வெளியூர். இனி அப்படி இல்லை. நீங்கள் இருக்கிறீர்கள். தொகுதியை வளமா மாத்திடுவோம்'ன்னு சொன்னதும் எங்களுக்கு ஆச்சர்யமா போயிட்டு. எப்படியோ எம்.எல்.ஏ இப்பயாச்சும் மாறி இருக்காறேங்கிற சந்தோஷம் ஏற்பட்டிருக்கு" என்றார்கள் உற்சாகமாக.