ஒரே நேரத்தில் கூட்டத்துக்கு சென்ற ஸ்டாலின், கோவிலுக்கு சென்ற துர்க்கா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த தி.மு.க. இளைஞரணியினருக்கான பயிற்சி முகாமின்போது, ஸ்டாலின் கூட்டத்திற்கு சென்ற அதே நேரத்தில் அவரது மனைவி துர்க்கா ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணியினருக்கான பயிற்சி முகாம் ராமநாதபுரம் அருகே உள்ள கழுகூரணி கிராமத்தில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு தலைமையில் நடந்த இந்த முகாமிற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுப.தங்கவேலன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி கம்பம் செல்வேந்திரன், கோவை செழியன் எம்.எல்.ஏ ஆகியோர் இளைஞரணியினருக்கு திராவிட இயக்க வரலாறு மற்றும் மொழிப்போர் குறித்து வகுப்பு நடத்தினர்.
இந்த பயிற்சி வகுப்பில் தலைமை உரையாற்றிய தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், ‘‘தி.மு.க.வின் துணை அமைப்புகளில் ஒன்றாக விளங்கி வருவது இளைஞரணி அமைப்பாகும். தி.மு.க.விற்கு பெருமை சேர்க்கும் வகையில் இளைஞரணி பணியாற்றி வருகிறது. இளைஞரணியினர் தி.மு.க.வுக்கு மட்டும் பயன்படுபவர்களாக இருக்க கூடாது. சமுதாய பணிகளுக்கும் பயன்படுபவர்களாக இருக்க வேண்டும். பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும். இளைஞர் அணியினருக்கான நிர்வாகிகளை மாவட்ட, ஒன்றிய வாரியாக நேர்காணல் நடத்தி தேர்வு செய்திருக்கிறோம். அப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் கட்டுபாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.

நாம் ஆட்சியை விட்டு இறங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் பத்திரிகைகள் நம்மைத்தான் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றன. அது
##~~## |
படங்கள்: உ.பாண்டி