Published:Updated:

மதுவிலக்கை வலியுறுத்தி 16ஆம் தேதி வைகோ மீண்டும் நடைபயணம்!

 மதுவிலக்கை வலியுறுத்தி 16ஆம் தேதி வைகோ மீண்டும் நடைபயணம்!
மதுவிலக்கை வலியுறுத்தி 16ஆம் தேதி வைகோ மீண்டும் நடைபயணம்!
 மதுவிலக்கை வலியுறுத்தி 16ஆம் தேதி வைகோ மீண்டும் நடைபயணம்!

பொள்ளாச்சி: முழு மதுவிலக்கை வலியுறுத்தி, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப்பயணத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வரும் 16ஆம் தேதி தொடங்குகிறார்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி ஏற்கனவே இரண்டு முறை நடைபயணம் செய்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மீண்டும் வருகிற 16ஆம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கி, 28ஆம் தேதி ஈரோட்டில் தனது நடைபயணத்தை முடிக்கிறார்.

அவர் செல்லும் ஊர்கள் விபரம் வருமாறு:

##~~##
16ஆம் பொள்ளாச்சி, சமத்தூர், கோட்டூர், மலையாண்டி பட்டணம், 17ஆம் பாரமடையூர், கரட்டூர், 18ஆம் தேதி தனி, உடுலை, 19ஆம் தேதி கிருஷ்ணாபுரம், கணியூர், 20ஆம் தேதி செலாம்பாளையம், தாராபுரம், 21ஆம் தேதி கொளத்துப்பாளையம், பெரமியம், 22ஆம் தேதி இலக்குவநாயக்கன்பட்டி, வெள்ளகோயில், 23ஆம் தேதி முத்தூர், ஒத்தகடை, 24ஆம் தேதி சிவகிரி, அரச்சலூர், 25ஆம் தேதி நத்தக்காடையூர், சென்னிமலை, 26ஆம் தேதி வெள்ளோடு, மேட்டுக்கடை, 27ஆம் தேதி சித்தோடு, குமாரபாளையம், 28ஆம் தேதி பள்ளிபாளையம், ஈரோடு.
இந்த நடைபயணத்தின் தொடக்க விழா பொதுக்கூட்டம் 16ஆம் தேதி காலை 8 மணிக்கு பொள்ளாச்சி ராஜேஸ்வரி திருமண மண்டபம் அருகில் நடக்கிறது. மருதாசல அடிகளார் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், 13 நாட்கள் நடக்கும் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணத்தில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த தொண்டரணி, இளைஞரணி, மாணவரணியினர் மற்றும் ம.தி.மு.க.வினர் திளராக பங்கேற்கிறார்கள்.
இந்த தகவலை ம.தி.மு.க. இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி தெரிவித்துள்ளார்.