Published:Updated:

`தனியறை... மறுக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள்!’ - திருமுருகன் காந்தியை விடுவிக்க சி.பி.எம் வலியுறுத்தல்

சிறையில் சித்ரவதைகளை அனுபவித்து வரும் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

`தனியறை... மறுக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள்!’ - திருமுருகன் காந்தியை விடுவிக்க சி.பி.எம் வலியுறுத்தல்

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் 50 நாள்களுக்கு மேலாகச் சிறையில் உள்ள அவரைத் தனியறையில் அடைத்துவைத்து கொடுமைப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் அவரது உடல்நிலை மோசமாகியுள்ளது. இரண்டு நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர். அவரை விடுதலை செய்ய வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். அந்தவகையில் மார்க்ஸிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருமுருகன் காந்தி விடுதலைக்குக் குரல் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ``மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் பேசுபவர்கள் மீது தேசத்துரோக வழக்கு, அவதூறு வழக்கு போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள். 

திருமுருகன் காந்தியை நீதிமன்றம் விடுதலை செய்த பின்பும் மீண்டும் மீண்டும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் அவரைத் தனியறையில் அடைத்த சுகாதாரமற்ற உணவு, உரிய மருத்துவசதிகள் இன்றி சித்ரவதைப்படுத்தியுள்ளனர். இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவரது உடல்நிலையைப் பராமரிக்க உரிய சிகிச்சைக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மார்க்ஸிஸ்ட் கட்சி சார்பில் இதை வலியுறுத்துகிறேன்" என அவர் கூறியுள்ளார்.