Published:Updated:

சட்டசபையிலிருந்து தி.மு.க. வெளிநடப்பு!

சட்டசபையிலிருந்து தி.மு.க. வெளிநடப்பு!
சட்டசபையிலிருந்து தி.மு.க. வெளிநடப்பு!
சட்டசபையிலிருந்து தி.மு.க. வெளிநடப்பு!

சென்னை: தமிழக சட்டசபையிலிருந்தி திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
 
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக எம்.எல்.ஏ. சக்கரபாணி எழுந்து ஒரு பிரச்னையை எழுப்ப முயன்றார்.அதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. நேற்றே உங்களுக்கு எனது முடிவை சொல்லி விட்டேன். அதற்கு மேல் விவாதம் செய்ய முடியாது என்றார்.
 
அப்போது அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறுக்கிட்டு,"தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சில பிரச்னைகளை எழுப்பி, சபாநாயகர் தீர்ப்பு வழங்கியபிறகு வெளிநடப்பும் செய்து விட்டார்கள். அந்த பிரச்னைக்கு இன்று விவாதம் நடத்த முடியாது" என்றார்.
 

##~~##
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசிக்க சபாநாயகர் அனுமதி அளித்தார்.அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கையில் அமராமல் எழுந்து நின்று சபாநாயகரிடம் பேச அனுமதி கேட்டனர். ஆனால் சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை.
 
"நேற்று வெளிநடப்பு செய்து சென்றபிறகு இன்று பிரச்னையை கிளப்புவது நியாயம் இல்லை. இருக்கையில் அமருங்கள்" என்று சபாநாயகர் கூறினார்.இதை ஏற்க மறுத்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்வதாக கூறி சபையில் இருந்து வெளியேறினார்கள்.