Published:Updated:

பூரண மதுவிலக்கு கோரி நடைபயணம் தொடங்கினார் வைகோ! (படங்கள்)

விகடன் விமர்சனக்குழு
பூரண மதுவிலக்கு கோரி நடைபயணம் தொடங்கினார் வைகோ! (படங்கள்)
பூரண மதுவிலக்கு கோரி நடைபயணம் தொடங்கினார் வைகோ! (படங்கள்)

சென்னை: பூரண மதுவிலக்கைஅமல்படுத்தக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.
 

பூரண மதுவிலக்கு கோரி நடைபயணம் தொடங்கினார் வைகோ! (படங்கள்)

பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழகம் முழுவதும் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
 

பூரண மதுவிலக்கு கோரி நடைபயணம் தொடங்கினார் வைகோ! (படங்கள்)

முதல் கட்டமாக நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து மதுரை வரை 300 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்ட வைகோ, செல்லும் இடங்களில் எல்லாம் மது ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பூரண மதுவிலக்கு கோரி நடைபயணம் தொடங்கினார் வைகோ! (படங்கள்)

2வது கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்ட வைகோர, 3வது கட்டமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து இன்று காலை நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தும் சந்திப்பில் இருந்து பயணத்தை தொடங்கி வைகோவுடன்,  மாநில அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, மாவட்ட செயலாளர்கள் மோகன்குமார் (கோவை மாநகர்), குகன்மில் செந்தில் (கோவை புறநகர்), மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சியில் இன்று தொடங்கிய நடைபயணத்தை வரும் 28ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் வைகோ முடிக்கிறார்.