Published:Updated:

ஈரானில் பயங்கர நிலநடுக்கம்; 100 பேர் பலி! : பாகிஸ்தான், டெல்லியிலும் அதிர்வு!

விகடன் விமர்சனக்குழு
ஈரானில் பயங்கர நிலநடுக்கம்; 100 பேர் பலி! : பாகிஸ்தான், டெல்லியிலும் அதிர்வு!
ஈரானில் பயங்கர நிலநடுக்கம்; 100 பேர் பலி! : பாகிஸ்தான், டெல்லியிலும் அதிர்வு!
ஈரானில் பயங்கர நிலநடுக்கம்; 100 பேர் பலி! : பாகிஸ்தான், டெல்லியிலும் அதிர்வு!

புதுடெல்லி: ஈரானை மையமாக கொண்டு இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 100 கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானை மையமாகக் கொண்டு இன்று மாலை 4.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டியது?

இதனால் சேதங்கள் மிகக்கடுமையாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டியிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த நிலநடுக்கம் ஈரான் மட்டுமல்லாது, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகள் என 46 நாடுகளில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் அதிர்வு

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம்   டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

##~~##
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கட்டிடங்கள் அதிர்ந்ததால், மக்கள் அலறியடித்தபடி வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.
குறிப்பாக டெல்லியின் புறநகரான நொய்டா மற்றும் குர்காவ் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரோட்டிலும் நில அதிர்வு

இதனிடையே சேலத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள ஈரோட்டின் எல்லைப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.