Published:Updated:

அழகிரியுடன், நெப்போலியன் திடீர் சந்திப்பு- ஒரு மணி நேரம் ஆலோசனை

மதுரை: தி.மு.க.வின் தென்மண்டல அமைப்பாளர் மு.க.அழகிரியை, நடிகரும், முன்னாள் அமைச்சருமான நெப்போலியன் நேற்று திடீரென சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

அழகிரியுடன், நெப்போலியன் திடீர் சந்திப்பு- ஒரு மணி நேரம் ஆலோசனை

தென்மண்டல தி.மு.க. அமைப்பாளர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், அவருடைய முன்னாள் அமைச்சரவை சகாவுமான நெப்போலியன் நேற்று மாலை 6 மணிக்கு மதுரை வந்தார். விமான நிலையத்தில் இருந்து சத்யசாய் நகரில் உள்ள அழகிரி வீட்டிற்குச் சென்ற அவர், சுமார் 1 மணி நேரம் அழகிரியுடன் ஆலோசனை நடத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழகிரியுடன், நெப்போலியன் திடீர் சந்திப்பு- ஒரு மணி நேரம் ஆலோசனை

அப்போது அழகிரியின் உடல்நலம் குறித்து விசாரித்த அவர், வருகிற மே 5ம் தேதி, 'தனது ரசிகர் மன்ற மதுரை மாவட்ட செயலாளரின் இல்லத் திருமண விழாவிற்கு வருவதாகவும், அதில் தாங்களும் கலந்து கொள்ள வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டார்.

இருந்தாலும், அழகிரியுடனான இந்த சந்திப்பிற்கு அரசியல் முக்கியத்துவம் உண்டா? என்று கேட்பதற்காக வாசலில் ஏராளமான நிருபர்கள் குவிந்தார்கள். தகவல் அறிந்ததும் அழகிரியின் வீட்டுக்குள் இருந்தபடியே, "செய்தியாளர்களிடம் பேச வாய்ப்பு இல்லை. அவர்கள் காத்திருக்க வேண்டாம்" என்று சொல்லி அனுப்பினார் நெப்போலியன்.

கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து
 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism