சாக்கடையில் இறங்கி சுத்தம்செய்தது ஏன்? - முதல்வர் நாராயணசாமி புது விளக்கம் | Chief minister Narayanasamy explains why he had cleaned drainage on that day

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (06/10/2018)

கடைசி தொடர்பு:17:45 (06/10/2018)

சாக்கடையில் இறங்கி சுத்தம்செய்தது ஏன்? - முதல்வர் நாராயணசாமி புது விளக்கம்

தஞ்சாவூரில், தனியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, `ஆளுநர் கிரண்பேடி, அரசு கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல்  திருப்பி அனுப்பிவிடுகிறார். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. அந்தக் கோப்புகளில்கூட கையெழுத்து போட மறுக்கிறார்' எனக் குற்றம் சாட்டினார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், 26-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, ``நான் சாக்கடையைச் சுத்தம்செய்தது பிரதமர் மோடி என்னை பாராட்டுவதற்காக  இல்லை.  நான் சுத்தம்செய்த பகுதியின் கால்வாயில் கழிவுநீரோடு பிளாஸ்டிக் கழிவுகள் கிடந்ததால்,  கழிவு நீர் மெதுவாகச் சென்றது. மூன்று  அடி ஆழமுள்ள பள்ளத்தில் மெதுவாகச் சென்ற கழிவு நீரை  நான் சுத்தம் செய்த பிறகு, வேகமாகச் செல்கிறது. அதோடு, நான் இறங்கி சுத்தம் செய்ததால் ஊழியர்கள் இரண்டு மணி நேரத்துக்குள் அந்தக் கால்வாய் முழுவதையும் சுத்தம் செய்தனர்.

டெல்லி யூனியன் பிரதேசம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அதிகாரிகள் செய்யும் பணிகளை  அமைச்சர்கள் கண்காணித்துவருகிறார்கள். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அரசு கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல்  திருப்பி அனுப்பிவிடுகிறார். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் 2 லட்சம் நிதியுதவி வழங்கபட்டுவருகிறது. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கிவருகிறது. அந்தக் கோப்புகளில்கூட கையெழுத்துபோட மறுக்கிறார் கிரண்பேடி. அவரைக் கண்டித்து சென்னை  உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு  சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பி.ஜே.பி-யினர்  குப்பைகளைக் கொட்டி சுத்தம்செய்கின்றனர்.  நாங்கள் அப்படிச் செய்யாமல், உண்மையாக சுத்தம்செய்கிறோம். நான்கு மாதத்தில் மத்திய அரசில் மாற்றம் வரும். அப்போது நல்ல விடியல் பிறக்கும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close