வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (06/10/2018)

கடைசி தொடர்பு:18:00 (06/10/2018)

தினகரனை ஓ.பி.எஸ் சந்தித்தாரா? - வைத்திலிங்கம் சொல்லும் காரணம்

``அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவும், மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தவுமே டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் என்னை சந்தித்தார் எனக் கூறிவருகிறார். 15 வருடங்களுக்கு முன் ஓ.பி.எஸ் சந்தித்ததைத்தான் ஆதாரமாகக் காண்பிப்பார்'' என்று முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்  கூறியுள்ளார்.

வைத்திலிங்கம்

``ஓ.பி.எஸ் தன்னைச் சந்தித்தார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. தேவைப்பட்டால் அதை வெளியிடுவேன்'' எனக் கூறி  அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதோடு, அ.தி.மு.க மத்தியிலும் சலசலப்பு உண்டாக்கினார் டி.டி.வி.தினகரன். இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் தன் கருத்தைக் கூறியுள்ளார்.  தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``எந்தச் சூழ்நிலையிலும் ஓ.பி.எஸ், தினகரனை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. ஆதாரம் இருக்கிறது என்று கூறுவது 15 வருடங்களுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலின்போது சந்தித்ததையே கூறுகிறார். அதைத்தான் ஆதரமாகக் காண்பிப்பார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் இல்லை; செல்வாக்கும் இல்லை. அதனால், பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவும், மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தவும் நினைக்கிறார்  தினகரன். அது ஒருபோதும் நடக்காது'' என்று கூறியிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க