வெளியிடப்பட்ட நேரம்: 20:42 (08/10/2018)

கடைசி தொடர்பு:13:22 (09/10/2018)

``ஆடியோ விவகாரத்தில் சிக்கும் விஐபி” - தினகரன் அணியின் அடுத்த வெடி!

செல்போன் ஆடியோ

தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ``எம்.பி. ஒருவருக்குத் தம்பி பாப்பா பிறந்துள்ளது” என்று சூசகமாக குறிப்பிட்ட விஷயம்தான் இப்போது அ.தி.மு.க வட்டாரத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது. யார் அந்த எம்.பி என்ற கேள்வியை தினகரன் தரப்பில் நாம் விசாரித்தபோது விவகாரமான விஷயத்தை நம்மிடம் சொல்கிறார்கள் தினகரன் அணியினர்.

அவர்களிடம் விசாரித்தபோது ``எம்.பி-க்கு தம்பி பாப்பா என்று சொன்னதன் பின்னணி எம்.பி பற்றியல்ல, தமிழகத்தில் பவர்ஃபுல்லாக இருக்கும் முக்கிய விஐபி ஒருவரை பற்றியாம். அந்த விஐபி தனது பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு வலை விரித்துள்ளார். அந்த வலையில் சிக்கிய அந்த இளம்பெண்ணோடு அவரும் சில காலம் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் கருவுற்று, சில நாள்களுக்கு முன்பு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அந்த இளம்பெண் கருவுற்ற விஷயத்தை அந்த விஐபியிடம் போனில் சொன்னபோது, ``அதைக் கலைத்துவிடு. நான் வீடு வாங்கித் தருகிறேன். பிரச்னை ஏதும் செய்ய வேண்டாம்” என்று அதிகாரத் தோரணையில் சொல்லியுள்ளார். இந்த விவகாரம் தினகரன் அணியினருக்குத் தெரிந்து அந்தப் பெண்ணை பிரசவம் வரை  அவர்கள் பாதுகாப்புடன் பத்திரமாக வைத்திருந்தனர். 


அந்த விஐபியோடு அந்த இளம் பெண் நடத்திய போன் உரையாடல் ஆடியோவையும் கைப்பற்றிக் கொண்டனர். இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அந்த விஐபிக்கு எதிராகக் கொம்பு சீவ ஆரம்பித்துள்ளார்கள் தினகரன் அணியினர். அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றித் தங்களை வறுத்தெடுக்கும் அந்த நபர், இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு தினமும் மைக் முன்னால் நின்று பேசுவார் என்று நக்கலாகச் சொல்லிவருகிறார்கள். ஏற்கெனவே பன்னீர்செல்வம் விவகாரத்தைக் கிளப்பி அ.தி.மு.க வட்டாரத்தை ஆட்டம் காண வைத்தவர்கள், இப்போது ஆடியோ விவகாரத்தையும், ஆண்வாரிசையும் வைத்து அந்த நபருக்கு எதிராக ஆடுபுலி ஆட்டம் காட்டத் தயாராகிவிட்டார்கள்.