Published:Updated:

தொகுதிகள் எவை? - திமுக - காங். பேச்சில் இழுபறி

சென்னை, மார்ச்.10, 2011

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக, திமுகவுடன் அக்கட்சி நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் இன்று முன்னேற்றம் காணப்படவில்லை.  ##~~##

திமுக - காங்கிரஸ் இடையே நாளையும் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மற்றும் காங்கிரஸின் ஐவர் குழுக்கள் இன்று 2 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததில் இருதரப்பினருக்கும் மகிழ்ச்சி என்றும் நாளையும் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் தெரிவித்தார்.

நாளை தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டுவிடுமா என அவரிடம் கேட்டபோது, நாளையும் பேச்சுவார்த்தை தொடரும் என்றே அவர் கூறினார்.

முன்னதாக இன்று காலை நிருபர்களிடம் கூறுகையில், இன்று மாலைக்குள் காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இறுதி செய்யப்பட்டுவிடும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையச் செய்தி: காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் எவை?

அடுத்த கட்டுரைக்கு