செங்கல்பட்டில் 700 கோடி ரூபாயில் நோய்த் தடுப்பு மையம் - மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா | Disease prevention centre in 700 crores at chengalpattu; information by central minister J.p.Nadda

வெளியிடப்பட்ட நேரம்: 21:17 (12/10/2018)

கடைசி தொடர்பு:21:17 (12/10/2018)

செங்கல்பட்டில் 700 கோடி ரூபாயில் நோய்த் தடுப்பு மையம் - மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா

செங்கல்பட்டில் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நோய்த் தடுப்பு மையம் அமையவிருப்பதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்திருக்கிறார்.

நட்டா

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, புதுச்சேரி மாநிலப் பா.ஜ.க அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளுக்கு நட்டா பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவில் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட உள்ளது. செங்கல்பட்டில் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள நோய்த் தடுப்பு மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைக்க இருக்கிறார். மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் பல்நோக்கு மருத்துவமனைகளைத் தொடங்க மத்திய அரசு 150 கோடி நிதி அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close