Published:Updated:

ஜே.பி.சி. அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: தி.மு.க.

ஜே.பி.சி. அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: தி.மு.க.
ஜே.பி.சி. அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: தி.மு.க.

சென்னை: நாடாளுமன்ற கூட்டுக்குழுவானது ராசாவை சாட்சியம் அளிக்க அழைக்காமல் அறிக்கையை இறுதி செய்தால், அந்த அறிக்கையை சரியானது என்று ஏற்றுக்கொள்ள முடியாது என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

##~~##
2ஜிஅலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் தொடர்பில்லை என்று  நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், இந்த முறைகேட்டிற்கான முழுப்பொறுப்பும் அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ ராசாவையே சாரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், நாடாளுமன்ற கூட்டுக்குழுவானது ராசாவை சாட்சியம் அளிக்க அழைக்காமல் அறிக்கையை இறுதி செய்தால், அந்த அறிக்கையை சரியானது என்று ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், ராசாவின் கோரிக்கையின் படி நாடாளுமன்றக்கூட்டுக்குழு முன் அவர் சாட்சியமளித்த பின்னரே இறுதி அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்றும் இளங்கோவன் கூறியுள்ளார்.