Published:Updated:

`பொய்களுக்குக் கால்கள் இல்லை... ஆனால்!’ - #Metoo குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் மறுப்பு #mjakbar

`பொய்களுக்குக் கால்கள் இல்லை... ஆனால்!’ - #Metoo குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் மறுப்பு #mjakbar
`பொய்களுக்குக் கால்கள் இல்லை... ஆனால்!’ - #Metoo குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் மறுப்பு #mjakbar

`பொய்களுக்குக் கால்கள் இல்லை... ஆனால்!’ - #Metoo குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் மறுப்பு #mjakbar

மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் தொடர்பாக metoo என்னும் ஹேஷ்டேக் மூலம் வெளிப்படையாக தெரியப்படுத்தி வந்தனர். சினிமா, அரசியல் என பல உயர்ந்த இடத்தில் இருந்தவர்களின் பெயர்களும் இந்தப் பட்டியல் இடம் பெற்று அதிர்ச்சி அளித்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் மீதும் புகார்கள் வந்தது. அவர் பத்திரிகையாளராக இருந்தபோது தன்னுடன் பணியாற்றும் சக பெண் ஊழியர்களிடம் தவறாக நடக்க முயன்றதாக பலர் புகார் தெரிவித்தனர். 

அவர் மீது புகார் அளிக்கப்பட்டபோது அவர் அரசு முறைப் பயணமாக ஆப்ரிக்கா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை அவர் இந்தியா திரும்பினார். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சென்ற அவர், விரைவில் அறிக்கை வெளியிடுவேன் என்றும் தெரிவித்தார். 

தற்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``நான் அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளில் இருந்ததால், என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியவில்லை. என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது, கற்பனையானது. அடிப்படை ஆதாரமற்றது. தற்போது, ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டுவது வைரல் காய்ச்சல்போல் பரவியுள்ளது. தற்போது நான் நாடு திரும்பிவிட்டேன். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எனது வழக்கறிஞர்களை ஆலோசித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பேன்” என்றார். அந்த அறிக்கையின் முடிவில்,``பொய்களுக்குக் கால்கள் இல்லை. ஆனால், அந்த வார்த்தைகள் விஷம் மிக்கவை. அவற்றின் மூலம் பலரின் உணர்ச்சிகளைத் தூண்ட முடியும். இது என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளை நான் எடுப்பேன்’’ என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தனது நீண்ட அறிக்கையில், மத்திய அமைச்சர் பெண் பத்திரிகையாளர்கள் முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, இன்று காலை எம்.ஜே அக்பர் நாடு திரும்பியதும், பதவி விலக உள்ளதாகத் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு