Published:Updated:

`இன்னும் 50 வருஷத்துக்கு பார்லிமென்ட்டில் பா.ஜ.க கொடி' - அடித்துச் சொல்லும் அமித் ஷா!

மலையரசு
`இன்னும் 50 வருஷத்துக்கு பார்லிமென்ட்டில் பா.ஜ.க கொடி' - அடித்துச் சொல்லும் அமித் ஷா!
`இன்னும் 50 வருஷத்துக்கு பார்லிமென்ட்டில் பா.ஜ.க கொடி' - அடித்துச் சொல்லும் அமித் ஷா!

இன்னும் 50 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வின் கொடி பறக்கும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

`இன்னும் 50 வருஷத்துக்கு பார்லிமென்ட்டில் பா.ஜ.க கொடி' - அடித்துச் சொல்லும் அமித் ஷா!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அங்கு பிரசாரம் மேற்கொண்டு பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று பேசினார். அப்போது பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியவர், ``பல்வேறு தொண்டர்களின் தியாகங்கள் மற்றும் உழைப்பின் காரணமாக கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வெற்றியை பா.ஜ.க பெற்றுள்ளது. நாம் அதிர்ஷ்டசாலிகள். அதேநேரம் நமக்குப் பொறுப்பும் இருக்கிறது. பா.ஜ.க-வில் இருந்து மட்டுமே மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒருவர், டீ விற்ற ஒருவர் நாட்டின் பிரதமராக முடியும். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றி ஒரு புயல் போன்றது. 

இந்தப் புயல் அடுத்தவருடம்  பொதுத்தேர்தலில் சுனாமியாக மாறும். அப்போது இந்த சுனாமி தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ஆந்திரா, ஒடிஷா, தெலங்கானா போன்ற மாநிலங்களையும் தாக்கும். இந்தத் தேர்தல்களில் நாம் வெற்றிபெற்று அடுத்த 50 வருடத்துக்குக் கிராம பஞ்சாயத்தில் இருந்து பார்லிமென்ட் வரை பா.ஜ.க-வின் கொடியைப் பறக்க வைப்போம். பா.ஜ.க மட்டுமே நாட்டின் பாதுகாப்பில் அக்கறை காட்டி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளை வைத்துக்கொண்டு ஓட்டுவங்கி அரசியல் நடத்தி வருகிறது" என்றார்.