Published:Updated:

டி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு!

மலையரசு
டி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு!
டி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு!

தி.மு.க செய்தித்தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிக்கப்பட்டுள்ளார். 

டி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு - தி.மு.க திடீர் அறிவிப்பு!

தி.மு.க மாநிலங்களவை எம்.பியாக இருந்து வருகிறார் டி.கே.எஸ் இளங்கோவன். இவர் தி.மு.க செய்தித்தொடர்பு செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு செய்தித்தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிக்கப்படுவதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாகக் கட்சியின் முதன்மை தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டு வந்த டி.கே.எஸ் இளங்கோவன் கட்சிப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் எதற்காக விடுவிக்கப்படுகிறார் என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. திடீரென வெளியாகியுள்ள அந்த அறிவிப்பு குறித்து அரசியல் களத்தில் விவாதங்கள் தொடங்கியுள்ளன.