நேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்! | AMMK Party Speaker Sivasankari Suspended

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (16/10/2018)

கடைசி தொடர்பு:21:30 (16/10/2018)

நேற்று தி.மு.க-வில் நடந்தது... இன்று அ.ம.மு.க-வில்!

அமமுக அறிக்கை

தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளராகவும் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதற்குக் காரணம் தொலைக்காட்சியில் கட்சியின் முடிவை அறியாமல், இளங்கோவனாகச் சில கருத்துகளைப் பகிர்ந்துதான் காரணம் என்று தி.மு.க தரப்பில் கூறப்பட்டது. இளங்கோவன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தி.மு.க-வினரிடையே ஆச்சயர்த்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த வழக்கறிஞர் சிவசங்கரியை செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார் அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். இதற்குக் காரணம் சமீப காலமாகவே சிவசங்கரி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றபோது இவர் தெரிவித்த கருத்துகளை டி..டி.வி.ரசிக்கவில்லையாம். சமீபத்தில் சபரிமலை விவகாரம் குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று சிவசங்கரி கூறிய கருத்துகள் தினகரன் தரப்பை டென்ஷனாக்கியுள்ளது. தொடர்ந்து இதுபோல் இவர் பேசிவந்தால் அது கட்சியின் கொள்கைக்குச் சிக்கலாகிவிடும் என்று அதிரடியாக அவரைப் பொறுப்பிலிருந்தும், உறுப்பினர் பதவியிலிருந்தும் தூக்கி அதிரடி காட்டிவிட்டார் தினகரன். நேற்று தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது, இன்று அ.ம.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கட்சியைவிட்டே நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.