“கிழிக்கப்பட்ட ஓ.பி.எஸ் பேனர்!”- கொந்தளித்த விழுப்புரம் அ.தி.மு.க. | Clash between paneerselvam and edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (17/10/2018)

கடைசி தொடர்பு:19:15 (17/10/2018)

“கிழிக்கப்பட்ட ஓ.பி.எஸ் பேனர்!”- கொந்தளித்த விழுப்புரம் அ.தி.மு.க.

பேனர்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடக்கவிருக்கும் அ.இ.அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவிருக்கிறார். இதன் பொருட்டு முதலமைச்சரை வரவேற்பதற்காக சென்னையிலிருந்து உளுந்தூர்பேட்டை வரை வழியெங்கும் வரவேற்பு பேனர்கள் அ.தி.மு.க-வினரால் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் எம்.பி., ஆர்.லட்சுமணன் ஆதரவாளர்களின் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், மர்மநபர்களால் கிழிக்கப்பட்டதால் அங்கே சலசலப்பு ஏற்பட்டது. 

விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளரும், விழுப்புரம் தொகுதியின் எம்.பி-யுமான ஆர்.லட்சுமணன், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஆவார். ஆர்.லட்சுமணனுக்கும் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் இடையே ஏழாம் பொருத்தம். இதில், அமைச்சர் சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.லட்சுமணனின் ஆதரவாளர்கள், அமைச்சர் சி.வி.சண்முகத்தால் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டுவந்துள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கூட்டரிப்பட்டி எனும் ஊரில் அ.தி.மு.க எம்.பி., ஆர்.லட்சுமணனின் ஆதரவாளர்கள் முதலமைச்சரை வரவேற்பதற்காக கூட்டரிப்பட்டியில் பேனர் வைத்துள்ளனர். இந்த பேனர்கள், மர்ம நபர்கள் சிலரால் கிழிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, துணை முதலமைச்சரும் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தையும் விழுப்புரம் எம்.பி., ஆர். லட்சுமணனின் படத்தையும் குறிவைத்துக் கிழித்திருக்கிறார்கள். இதனால், கூட்டரிப்பட்டியில் ஆர்.லட்சுமணன்  ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டதால், அங்கே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.