Published:Updated:

2ஜி: கருணாநிதியுடன் ஆ.ராசா திடீர் சந்திப்பு!

2ஜி: கருணாநிதியுடன் ஆ.ராசா திடீர் சந்திப்பு!
2ஜி: கருணாநிதியுடன் ஆ.ராசா திடீர் சந்திப்பு!
2ஜி: கருணாநிதியுடன் ஆ.ராசா திடீர் சந்திப்பு!

சென்னை: 2ஜி விவகாரத்தில் முன்னாள் மத்தியம் அமைச்சர் ஆ.ராசாவை குற்றம் சாட்டி நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணை வரைவு அறிக்கை குற்றம் சாட்டியுள்ள நிலையில், அவர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும், 2ஜி ஒதுக்கீட்டில் பிரதமரை அப்போதைய தொலை தொடர்புதுறை அமைச்சராக இருந்த ஆ. ராசா தவறாக வழிநடத்தினார் என்றும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணை வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பிரதமரை ஒரு அமைச்சர் தவறாக வழிநடத்த முடியுமா என கேள்வி எழுப்பினார்.

##~~##
இந்நிலையில் டெல்லியிலிருந்து இன்று சென்னை திரும்பிய ஆ.ராசா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது,"2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அனைத்து பணிகளும், பிரதமர் மன்மோகன் சிங்குடன் கலந்து ஆலோசனை செய்த பிறகே நடைபெற்றது. நான் நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன்" என்று கூறினார்.
இந்நிலையில் இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் ஆ,ராசா சந்தித்துப் பேசினார்.அப்போது 2ஜி குறித்த  நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அறிக்கை தொடர்பாக இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.