எம்.ஜி.ஆரை மறந்த தஞ்சை அ.தி.மு.க! - பதற வைத்த ஃப்ளெக்ஸ் பேனர் | MGR supporters disappointed for admk's flex board

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (18/10/2018)

கடைசி தொடர்பு:15:55 (18/10/2018)

எம்.ஜி.ஆரை மறந்த தஞ்சை அ.தி.மு.க! - பதற வைத்த ஃப்ளெக்ஸ் பேனர்

அ.தி.மு.க-வின்  47 வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்துக்காக வரவேற்று வைக்கப்பட்ட ஃப்ளெக்ஸ் போர்டில், எம்.ஜி.ஆர் படத்தைப் போடாததால் வேதனைப்படுகின்றனர் கட்சித் தொண்டர்கள்.

தஞ்சாவூரில் அ.தி.மு.க-வின் 47 வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பொதுக்கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. இதில், அமைச்சர்களை வரவேற்று ஃப்ளெக்ஸ் போர்டு வைத்தனர். இந்தப் போர்டில் எம்.ஜி.ஆர் படத்தையே போடவில்லை. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ``நெருக்கடியான காலகட்டத்தில்தான் தி.மு.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். மண்ணைவிட்டு அவர் மறைந்தாலும் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து வருகிறார். இன்றைக்கும் அ.தி.மு.க-வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது அவரால் அடையாளம் காட்டப்பட்ட இரட்டை இலைச் சின்னம்தான். தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆர் படத்தைப் போடாமல் இவர்களால் வாக்கு கேட்க முடியுமா. இப்படியொரு ஃப்ளெக்ஸ் பேனர் வைத்திருப்பதைப் பற்றி அமைச்சர்களும் கேள்வி கேட்கவில்லை. இது எம்.ஜி.ஆர் விசுவாசிகளை மிகவும் வேதனைக்குள்ளாக்கிவிட்டது. தங்களை வளர்த்துக்கொள்ளத்தான் பலரும் விரும்புகிறார்களே தவிர, கட்சியின் தூண்களை மறந்துவிட்டனர்" என்றார் கவலையுடன். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க