Published:Updated:

தொ.மு.ச தலைவர் குப்புசாமி காலமானார்

தொ.மு.ச தலைவர் குப்புசாமி காலமானார்
தொ.மு.ச தலைவர் குப்புசாமி காலமானார்
தொ.மு.ச தலைவர் குப்புசாமி காலமானார்

சென்னை: தி.மு.க தொழிற்சங்கமான, தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் தலைவர் செ.குப்புசாமி சென்னையில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 87.

கடந்த சில தினங்களாக உடல்நலம் குன்றியிருந்த குப்புசாமி, நேற்றிரவு 9 மணியளவில் சென்னை நந்தனத்தில் உள்ள அவருடைய இல்லத்தில காலமானார்.

##~~##
கடந்த 1977ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் தலைவர் பொறுப்பை குப்புசாமி வகித்து வந்துள்ளார். தி.மு.க சார்பாக வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை வெற்றிபெற்றுள்ளார்.
குப்புசாமியின் மறைவையொட்டி இன்று முதல் மூன்று தினங்களுக்கு துக்கம் அனுசரிப்பதாக தி.மு.க அறிவித்துள்ளது.