Published:Updated:

வங்கிச் சிக்கல்கள்... மோடி சொல்லவேண்டிய தீர்வு!

வங்கிச் சிக்கல்கள்... மோடி சொல்லவேண்டிய தீர்வு!
பிரீமியம் ஸ்டோரி
வங்கிச் சிக்கல்கள்... மோடி சொல்லவேண்டிய தீர்வு!

வங்கிச் சிக்கல்கள்... மோடி சொல்லவேண்டிய தீர்வு!

வங்கிச் சிக்கல்கள்... மோடி சொல்லவேண்டிய தீர்வு!

வங்கிச் சிக்கல்கள்... மோடி சொல்லவேண்டிய தீர்வு!

Published:Updated:
வங்கிச் சிக்கல்கள்... மோடி சொல்லவேண்டிய தீர்வு!
பிரீமியம் ஸ்டோரி
வங்கிச் சிக்கல்கள்... மோடி சொல்லவேண்டிய தீர்வு!

டந்த 2016 நவம்பர் 8-ம் தேதி அன்று பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அதிரடியாக வெளியிட்டதுபோல, வங்கிப் பிரச்னைகள் தலைவிரித்தாடும் இன்றைய நிலையில், அந்தப் பிரச்னைக்குத் தீர்வு செல்கிறமாதிரி பிரதமர் நரேந்திர மோடி ஆற்ற வேண்டிய உரையை சர்வதேசப் பொருளாதார நிபுணர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன் எழுதியுள்ளார். இந்தக் கட்டுரை மார்ச் 27 தேதியிடப்பட்ட சுவராஜ்யா இதழில் ஆங்கிலத்தில் வெளியானது. இவற்றில் சில யோசனைகள் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் டாக்டர். ஒய்.வி.ரெட்டி, வங்கிகளின் இன்றைய நிலை எனும் தலைப்பில் பேசியிதிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

வங்கிச் சிக்கல்கள்... மோடி சொல்லவேண்டிய தீர்வு!

கோதரர்களே,

கடந்த 2016-ம் ஆண்டு ​நவம்பர் 8-ம் தேதி உங்களுடன் பேசினேன். ஊழலை ஒழிப்பதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவினை அறிவித்த தினம் அது. எனது அந்த முடிவுக்கு நீங்கள் அமோக ஆதரவு தந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அன்று எடுத்த அந்த முடிவினால், இத்தனை நாளும் வரி கட்டாமல் ஏமாற்றி ​வந்தவர்கள் வரி கட்டத்தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த வரிப் பணத்தை நல்ல சாலைவசதிகளை அமைக்க, ரயில்வசதியை மேம்படுத்த, எல்லோருக்கும் மின்சார வசதியை வழங்க செலவு செய்கிறோம்; கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைப் பெண்களுக்கு சமையல் எரிவாயு தந்துவருகிறோம்.

இந்த அரசானது அடித்தட்டில் இருக்கிற 90 சதவிகித மக்களின் செல்வம் குறிப்பிடத்தகுந்த அளவு உயர வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு வருகிறது. இந்த 90 சதவிகித மக்களின் செல்வம் கடந்த 2014 முதல் 2017 வரை டாலர் மதிப்பில் ​ஒவ்வொரு வருடமும் ​12% வளர்ந்திருப்பதாக நம்பத்தகுந்த தனியார் நிறுவனங்கள் தரும் புள்ளிவிவரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த மூன்றாண்டு காலத்தில், 1%, 5%, 10% செல்வத்தை வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறைந்திருக்கிறது. அதேசமயம் மக்கள் தொகையில் உள்ள 90 சதவிகித மக்களின் செல்வமும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. சமமற்ற நிலையை நாங்கள் வேகமாகக் குறைத்து, அடித்தட்டு மக்களை வாழ்வில் உயர்த்தி வருகிறோம்.

அடித்தட்டு மக்களை முன்னேற்றம் காண வைப்பதில் இன்னுமொரு முக்கியமான அறிவிப்பினை நான் இன்று வெளியிடப் போகிறேன். ஐம்பது ஆண்டுகளுக்குமுன்பு பிரதமர் இந்திரா காந்தி எல்லா வங்கிகளையும் தேசியமயமாக்கினார். அன்றைய நிலையில் இது ஒரு முக்கியமான முடிவு. அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை வங்கிகள் நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பாடுபட்டன. பொதுத்துறை வங்கிகள் இல்லாமல் போயிருந்தால், தொழில் துறை இந்த அளவுக்கு வளர்ச்சியைக் கண்டிருக்க முடியாது; விவசாய உற்பத்தியைப் பெருக்கியிருக்க முடியாது; சிறிய மற்றும் நடுத்தர அளவில் தொழில் செய்பவர்கள் கடன் கிடைக்காமல் அழிந்தே போயிருப்பார்கள்.

என்றாலும், எல்லாக் காலத்துக்கும் ஏற்ற கொள்கை முடிவு என்று எதுவும் கிடையாது. ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு, நாம் அன்றைக்கு எடுத்த முடிவு அதன் லட்சியத்தை அடைந்ததா, அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்து யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வங்கிச் சிக்கல்கள்... மோடி சொல்லவேண்டிய தீர்வு!


ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் பல தொழிலதிபர்களுக்குப் பொதுத் துறை வங்கிகள் ஏராளமான கடன் கொடுத்ததும், அந்தக் கடனில் குறிப்பிட்ட பகுதி இப்போது வாராக் கடனாக மாறியிருப்பதும் உங்களுக்குத் தெரிந்த விஷயம்தான். கடன் வாங்கியவர்களில் சிலர் கடனைத் திரும்பக் கட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள்; சிலர், வேண்டுமென்றே கட்டாமல் இருக்கிறார்கள். வங்கி தந்தக் கடனைத் திரும்ப வசூலிப்பதற்கு எங்களாலான அத்தனை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.

காரணம், அது மக்களான உங்கள் பணம்; நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து  சேமித்த பணம். கடன் வாங்கியவர்களின் சொத்துகளை ஏலம் விட்டு, அதிலிருந்து கிடைக்கும் பணத்தைத் திரும்பப் பெற்றுவருகிறோம். என்றாலும், இதனால் ஏற்பட்ட நஷ்டம் மிகப் பெரிய அளவில் இருக்கிறது. இதனால், ரூ.2.11 லட்சம் கோடியை வங்கி மூலதனமாகத் தரவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் பணம் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுக்குப் பயன்பட்டிருக்கும். 

இவ்வளவு பணத்தைத் தந்தபின்பும், வங்கிகளின் பிரச்னை தீர்ந்தபாடில்லை; திரும்ப வரவேண்டிய வசூல் தொகையும் வந்தபாடில்லை. பஞ்சாப் நேஷனல் பேங்கில் நடந்த மோசடியை இத்தனை நாளும் கண்டுபிடிக்காமல், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கவனிக்காமல் விட்டதைப் பார்க்கும்போது நமக்கு ஆத்திரமாகத்தான் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அரசு எடுத்த சில முடிவுகள், மோசடிகளை  மேலும் நடக்காமல் தடுத்திருக்கிறது.

என்றாலும், நாங்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. வங்கிகளைப் பாதுகாப்பானதாக, உறுதிமிக்கதாக, எதிர்காலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்வதாக, தேச முன்னேற்றத்தை வளர்த்தெடுப்பதாக ஆக்குவதில் நம்மால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து சிந்தித்து  வருகிறோம். நிச்சயமாக நாம் சில மாற்றங்களைக் கொண்டுவந்தாக வேண்டும். இப்போதுதான் அந்த மாற்றங்களை செய்வதற்கான நேரம்.

நமக்கு வலுவான வங்கி அமைப்பு தேவை. நமது பொதுத்துறை வங்கிகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். நமது தனியார் வங்கிகள் லாபத்தைச் சம்பாதிக்கிற அதேசமயத்தில், தேசத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றவும் வேண்டும்.

ஆனால், அரசிடமிருந்து இருக்கும் நிதி ஆதாரமோ குறிப்பிடத்தகுந்த அளவுதான். இதனை வங்கிக்கு மூலதனமாகத் தந்து, அதனைப் பெரும் பணக்காரர்கள் கடனாக வாங்கி, திரும்பத் தராமல் போவதைவிட, இன்னும் முக்கியமான பல வேலைகளை செய்வதற்குச் செலவிட வேண்டியுள்ளது. பிரதமர் வாஜ்பாய் அரசாங்கம் நடந்தபோது, வங்கிகளின் மூலதனம் மோசமான நிலையை அடைந்ததினால், பணம் தரப்பட்டது. எனக்கு முன்பாக இருந்தவர்கள் உருவாக்கி வைத்துவிட்டுச் சென்ற குழப்பத்தை நீக்க, எனது அரசாங்கம் கூடுதல் மூலதனத்தைத் தரவேண்டியிருக்கிறது.

ஆனால், மக்களின் வரிப் பணத்தைக் கொண்டுதான் வங்கிகளைப் பலப்படுத்தி வருகிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்தப் பணம் நமது குழந்தைகளுக்காக, பெண்களுக்காக, விவசாயிகளின் நலனுக்காகச் செலவு செய்யப்பட்டு இருக்கவேண்டிய பணம்.

இதையெல்லாம் மனதில்கொண்டு, வங்கி அமைப்பினைக் காப்பாற்ற உங்கள் அரசாங்கம் பின்வரும் முடிவுகளை எடுக்கப்போகிறது. அரசுக்கு சொந்தமான இரு பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கினை 26 சதவிகிதத்திற்குக் கீழ் குறைக்கப்படுகிறது. இரண்டாவது கட்டமாக, இந்தப் பங்குகளை சந்தை நல்ல நிலையில் இருக்கும்போது விற்க வேண்டும். ​இந்த இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவது குறித்து நமது இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிவிப்பினை வெளியிடும். அரசுக்குச் சொந்தமான மற்ற பொதுத்துறை வங்கிகளின் அரசின் பங்கானது எந்த வகையிலும் குறைக்கப்படாது.

பொதுத்துறை வங்கிகளில் அரசுக்குச் சொந்தமான பங்கினைப் பராமரிக்க பேங்க் ஹோல்டிங் கம்பெனி ஒன்றைத் தொடங்க வேண்டும். இந்த ஹோல்டிங் கம்பெனியில்  அரசாங்கம் மெஜாரிட்டியான பங்கினைக் கொண்டிருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் சிறப்புச் சட்டத்தின் (Special Acts of Parliament) மூலம் உருவாக்கப்பட்ட எல்லாப் பொதுத்துறை வங்கிகளும் கம்பெனி சட்டத்திற்கு உட்பட்ட நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும். இந்த ஏற்பாடு, பொதுத் துறை வங்கிகள் தனியார் வங்கிகளுடன் போட்டி போடுவதற்குத் தகுந்ததாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கிகளைக் கண்காணிக்கிற ஓர் அமைப்பாகத் தொடரும்.

அரசு சாராத அமைப்புகள்/ நிறுவனங்கள் மற்றும்  தனிநபர்கள் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் வங்கிகள் முன்னுரிமை வழங்கப்படவேண்டிய துறைகளுக்கு வங்கிச் சேவையை அளிக்க வேண்டும். இந்த சேவைக்காகத் தேவைப்படும் நிதியை, குறிப்பிட்ட வங்கிகள் வெளியிடும் பாண்டுகளை வாங்குவதன் மூலம் நிறைவேற்றிக்கொள்ளலாம். இவற்றிற்கான வட்டியானது குறைவாக இருக்கும். அதேசமயம் முன்னுரிமைத் துறைகளுக்கு நேரடியாக வங்கிச் சேவை அளிக்காத வங்கிகளிடமிருந்து, ஆண்டு சேவை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிடும். 

இவ்வாறு  வங்கிகளிடமிருந்து வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் விவசாயிகளுக்கு உபயோகப்படும் வகையில் இன்ஷூரன்ஸ் ஃபண்டாக வைக்கப்படும்.  இந்த இன்ஷூரன்ஸ் ஃபண்டைப் பற்றிய விவரங்கள் மற்றும் எந்தெந்த ரிஸ்க்குகள் இவற்றில் கவர் செய்யப்படும் (காப்பீடு விவரங்கள்) என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.​

மத்திய அரசாங்கமானது ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து ‘​முழு ​ரிசர்வ் பேங்கிங்’ என்கிற புதிய அமைப்பை உருவாக்க ஒரு கமிட்டி அமைக்கப்படும். மக்கள் டெபாசிட்டாக போடும் பணம் எவ்வளவாக இருந்தாலும், அதிலிருந்து ஒரு ரூபாய்க்கூட குறையாமல் இந்த ‘ரிசர்வ் பேங்கிங்’ மூலம் அளிக்கப்படும். அதாவது டெபாசிட்டுக்கு ஈடாக ரிசர்வ் தொகை உருவாக்கப்படும். இதற்கான அறிவிப்பும் விரைவில் வரும்.

மேலும், இந்திய வங்கிகளில் வெளிநாட்டினரின் முதலீடு 51 சதவிகிதத்துக்கும் கீழே இருக்கிறமாதிரி பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் விதிமுறைகள் பிறப்பிக்கப்படும். இதன்மூலம் எந்த இந்திய வங்கியும் வெளிநாட்டினர் கட்டுப்படுத்தும் வகையில் இருக்காது. இந்திய வங்கிகளில் 51% பங்குகளை இந்திய நிறுவனங்களே வைத்திருக்கக்த் தேவையான நடவடிக்கைகளைக் கொண்டுவர போதிய காலஅவகாசம் தரப்படும்.

‘பேங்க் போர்ட்ஸ் பீரோ’ அமைப்பில்  அரசு, ரிசர்வ் வங்கி, மக்கள் பிரதிநிதிகள் இருக்கிற மாதிரி மாற்றியமைக்கப்படும். வங்கியின் தலைவர்களையும், நிர்வாக இயக்குநர்களையும், மற்ற முழுநேர செயல் இயக்குநர்களையும் இந்த அமைப்பு தேர்வு செய்யும். சுயாதீன இயக்குநர்களாக (Independent Directors) யார் இருக்கலாம் என ‘பேங்க் போர்ட்ஸ் பீரோ’ பரிந்துரை செய்யலாம்; அவர்களில் யார் சுயாதீன இயக்குநர்களாக நியமிக்கலாம் என மத்திய அரசாங்கம் முடிவு செய்யும்.

வளர்ந்த நாடுகளில் வங்கிகளை நடத்தும் வேலையை அந்த நாட்டு அரசாங்கங்கள் செய்வதில்லை. ​அதனாலேயே, நஷ்டம் வராது என்றும் சொல்ல முடியாது.  வீடுகள் அடமானமாக வாங்கப்படுவதினால், ரியல் எஸ்டேட் துறைக்கு அதிகமாக கடன் வழங்கப்படுகிறது. 

ரியல் எஸ்டேட் துறைக்கு அளவுக்கதிகமாக கடன் வழங்கக்கூடாது. அப்படி வழங்கினால், நிதி அமைப்புகள் பாதிப்புக்குள்ளாகி, பொருளாதார வளர்ச்சி பாதிப்படைய வாய்ப்புண்டு.​ இது உலக அனுபவம்.​

அவர்கள் செய்த அதே தவறினை நாங்களும் செய்ய விரும்பவில்லை. அவர்கள் செய்த தவறுகளிலிருந்து சரியான பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமே, தவிர நெகட்டிவ்-ஆன முடிவுகளை நாம் எடுக்கக்கூடாது. எந்தெந்தத் துறைக்கு எப்போதெல்லாம் கடன் தரலாம், எந்த அளவுக்குத் தரலாம், அதுதொடர்பாக கருத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வகுத்து வெளியிடும்.

நிலையான  சிறப்பான  செயல்பாட்டிற்கு அரசு மற்றும் தனியார் வங்கிகள் தேவை. உலக அளவில், பங்குதாரர்களின் லாபத்தை கூட்டும்  நோக்கில் மட்டுமே செயல்படும் வங்கிகளினால் பொருளாதாரம் சரிவதும், நாட்டின் நிதி நிலை சரிவதும் அதிகமாக உள்ளதற்கு சாட்சியங்கள் நிறையவே உள்ளன.    

இந்த மாற்றங்கள் எல்லாம் மிக முக்கியமானவை. நமது வங்கி அமைப்பானது இன்னும் பெரிதாக, சிறப்பானதாக, பாதுகாப்பானதாக மாறுவதற்கு இந்த மாற்றங்கள் நிச்சயம் தேவை. நாம் கொண்டுவரவிருக்கும் இந்த மாற்றங்களினால், ஏழைகள், சிறு வியாபாரிகள், பெண்கள், விவசாயிகள் எனப் பலரும் வங்கி அமைப்புக்குள் வருவார்கள். அதேசமயத்தில், மக்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை, வரியை வங்கிகள் மூலம் யாருக்கோ செல்வதைத் தடுக்க வேண்டும். இந்தப் பணம் மக்களுக்காக செலவு செய்யப்பட வேண்டுமே ஒழிய, கடன் தந்து, அந்தப் பணம் திரும்ப வராமல் நஷ்டம் ஏற்படுத்தக் கூடாது. இந்த மாற்றங்களைக் கொண்டு வரத்தான் இன்று நான் அறிவித்திருக்கும் இந்த அடிப்படை மாற்றங்கள்.

பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை இந்த மாற்றங்கள் கொண்டுவருவதுடன்,  வளர்ச்சியை அதிகப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். போட்டி மிகுந்த ஒரு வங்கி அமைப்பு இருக்கும்போது, நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான கடனைத் தருவதற்கான சரியான விதிமுறைகள் வகுக்கப்படும்.

இதன்மூலம் வரி வருவாய் அதிகரித்து, இன்னும் சிறப்பான சாலைகளையும், பள்ளிகளையும், கல்வியையும், மருத்துவ மனைகளையும் தருவதுடன், நமக்கும், நம் குழந்தைகளுக்கும் நல்ல குடிநீரையும் வழங்க முடியும்.

நம் நாடு பன்முகத்தன்மை கொண்டது. எனவே, நமது கொள்கைகளும் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். நமக்குப் பொதுத்துறை வங்கிகளும், தனியார் துறை வங்கிகளும் வேண்டும்.

என்றாலும், நமது வங்கிகளில் பெரும்பான்மைப் பங்கு இந்தியர்களிடம் இருக்க வேண்டும். வங்கிகளுக்கான வலுவான கட்டுப்பாடு மற்றும் லாபகரமான வளர்ச்சி இரண்டையும் சம அளவில் வைத்திருக்க பாடுபடுவோம்.

அதேபோல் தனியார் தேவைகளையும் நாட்டின் முன்னுரிமைகளையும் சமன் படுத்தவேண்டும். 

​நான் இன்று அறிவித்திருக்கும் இந்த முடிவுகளில் மாற்றங்கள் தேவைப்படுமெனில், எப்போது வேண்டுமானாலும் திருத்தங்களைக் கொண்டுவரலாம். ​அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ​

என்றாலும்,இந்த மாற்றங்கள் மூலம் ​நாட்டிற்காக ​கஷ்டப்பட்டு உழைக்கும் சாதாரண மக்கள், அவர்கள் பெண்களோ, ஆண்களோ, நகர்ப்புறத்தில் அல்லது கிராமப்புறங்களில் இருப்பவர்களோ, இளைஞர்களோ அல்லது முதியவர்களோ, அனைவரும் ​நிறைய பயன் அடைவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism