Published:Updated:

கே.கே.எஸ்.எஸ்.ஆர். முன்பு திமுகவினர் மோதல்-பரபரப்பு

கே.கே.எஸ்.எஸ்.ஆர். முன்பு திமுகவினர் மோதல்-பரபரப்பு
கே.கே.எஸ்.எஸ்.ஆர். முன்பு திமுகவினர் மோதல்-பரபரப்பு
கே.கே.எஸ்.எஸ்.ஆர். முன்பு திமுகவினர் மோதல்-பரபரப்பு

சிவகாசி: முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். முன்பு கோஷ்டி பிரச்னை காரணமாக தி.மு.க.வினர் மோதிக்கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசி ஒன்றியத்தில் தி.மு.க.வின் கிளைச் செயலாளர்கள் தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தலைமையில் நடந்தது.

சிவகாசி தி.மு.க. ஒன்றிய செயலாளர் வனராஜாவுக்கும், முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்திரனுக்கும் கோஷ்டி பூசல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் திரண்டு வந்தனர். கூட்டம் தொடங்கியதும் தங்களது ஆதரவாளர்களுக்குத்தான் கிளைச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று இருவரும் மாறி மாறி சத்தம் போட்டனர்.
இதில் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பு நடந்தது.

##~~##
தொடர்ந்து சிலர் மண்டபத்துக்கு வெளியே இருந்த கார் கண்ணாடிகளை உடைத்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவசரமாக மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
சிவகாசி ஒன்றிய செயலாளர் வனராஜா மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்திரன் ஆகியோர் பரஸ்பரம் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் இரு தரப்பிலும் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எம்.கார்த்தி