Published:Updated:

அவர்களுக்கு ஒரு நீதி; எங்களுக்கு ஒரு நீதியா? - மோடியின் நிராகரிப்பும்.. பினராயின் விமர்சனமும்..

அவர்களுக்கு ஒரு நீதி; எங்களுக்கு ஒரு நீதியா? - மோடியின் நிராகரிப்பும்.. பினராயின் விமர்சனமும்..
அவர்களுக்கு ஒரு நீதி; எங்களுக்கு ஒரு நீதியா? - மோடியின் நிராகரிப்பும்.. பினராயின் விமர்சனமும்..

கேரளா மறுசீரமைப்புக்காக மாநில அமைச்சர்கள் வெளிநாடு சென்று நிதி திரட்ட மத்திய அரசு அனுமதிக்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறிவிட்டார் எனக் கடுமையாக சாடியுள்ளார் பினராயி.

கேரளாவில் ஏற்பட்ட பிரளயத்திலிருந்து அம்மாநிலம் மீண்டு வருகிறது. வெள்ளத்தின் போது ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்கும் பணியில் அம்மாநில அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. சபரிமலை மலை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடந்து வந்தாலும், தடம்மாறாமல் மறுகட்டமைப்பு பணிகளில் முதல்வர் பினராயி ஈடுபட்டு வருகிறார். அதன்ஒரு பகுதியாக தற்போது ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள அவர், அங்குள்ள மலையாளிகள் மத்தியில் கேரளாவின் மீள்கட்டமைப்பு குறித்து உரையாற்றி நிதி திரட்டி வருகிறார். முதலில் நிதி திரட்ட மாநில அமைச்சர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்த அவர், அதற்கு மத்திய அனுமதி தரவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஐக்கிய அரபு வாழ் மலையாளிகளிடேயே பேசியதைத் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பினராயி, ``கேரளாவை மறுசீரமைக்க வெளிநாடுகளில் உள்ள மலையாளிகளிடம் நிதி கோர அமைச்சர்கள் அனுப்பி வைக்க முடிவு எடுக்கப்பட்டது. பிரதமரை நேரில் சந்தித்து இதற்கு அனுமதி கோரப்பட்டது. அவரும் அனுமதி அளிப்பதாகக் கூறினார். 

ஆனால் சில நாட்களில் அமைச்சர்களின் பயணத்துக்கு தூதரக அனுமதி மறுக்கப்பட்டது. ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என எனக்குப் புரியவில்லை. கேரளம் பிரளயத்தை எதிர்நோக்கி இருந்த போது பல நாடுகள் தாமாக முன்வந்து உதவிகள் செய்ய தயாராக இருந்தன. ஆனால் மத்திய அரசு அதனை நிராகரித்துவிட்டது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட குஜராத்தை கட்டமைக்க அவர் வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெற்றார். ஆனால் அதே நமக்கு நேர்ந்த அதற்கு எதிராகச் செயல்படுகிறார். மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டார். கேரளா யார் முன்பும் தோற்க தயாராக இல்லை. நமது நாட்டை மீண்டும் கட்டமைப்போம். புதிய கேரளம் உருவாகாது என்பதைக் கூறுவதை நம்ப வேண்டாம். வெளிநாட்டு கேரள மக்கள் எங்கள் நிலத்தின் பலம். அவர்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அனைத்து வெளிநாட்டவர்களும் கேரளத்தின் புனரமைப்பில் பங்கேற்க வேண்டும்'' என அவர் கூறியுள்ளார்.