Published:Updated:

தொடரும் குறுக்கு விசாரணை! - ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 3-வது முறையாக அவகாசம் நீட்டிப்பு

தொடரும் குறுக்கு விசாரணை! - ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 3-வது முறையாக அவகாசம் நீட்டிப்பு
தொடரும் குறுக்கு விசாரணை! - ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 3-வது முறையாக அவகாசம் நீட்டிப்பு

தொடரும் குறுக்கு விசாரணை! - ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 3-வது முறையாக அவகாசம் நீட்டிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் நான்கு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும் அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. மரணத்தில் சந்தேகம் எழுப்பப்படவே, அது குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் நான்கு மாதம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இன்றுடன் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில் அவகாசம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்ட நிலையில் இது மூன்றாவது முறையாகும். அப்போலோ மருத்துவமனையில் ஆய்வு, டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை என அனைத்து தரப்பிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், சசிகலா தரப்பிலும் அவ்வப்போது குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால்தான் மூன்றாவது முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு