Published:Updated:

`விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் சிபிஐ அதிகாரி’ -குற்றம்சாட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை!

`விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் சிபிஐ அதிகாரி’ -குற்றம்சாட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை!
`விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் சிபிஐ அதிகாரி’ -குற்றம்சாட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை!

லஞ்சப் புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள மத்திய சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான வர்மா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், அதன் துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானாவுக்கும் இடையேயான மோதல்தான் கடந்த  ஒரு  மாதமாக மத்திய அரசு அதிகாரிகள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக வலம் வந்துகொண்டிருக்கிறது. அலோக் வர்மா குறித்து ராகேஷ் புகார் தெரிவிப்பதும், பதிலுக்கு ராகேஷ் செய்த தவறுகளை அலோக் வர்மா தெரிவிப்பதுமாக இருந்துவந்துள்ளது. இறைச்சி ஏற்றுமதி வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக அலோக் வர்மா மீதும், ரூ.3 கோடி லஞ்சம் பெற்றதாக அஷ்தானா மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுதான் இவர்களின் மோதல் வெளியில் தெரியவர காரணமாக இருந்தது. 

இதையடுத்து, இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்ட மத்திய அரசு, இரு அதிகாரிகளுக்கும் கட்டாய விடுப்பு வழங்கி இணை இயக்குநர் நாகேஷ்வர் ராவை நேற்று இடைக்கால இயக்குநராகப் பணி நியமனம் செய்தது. மத்திய அரசு எடுத்த இந்த நள்ளிரவு நடவடிக்கை தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. விசாரணை நடத்தாமல் எப்படி அதிகாரியை மாற்றலாம், சிபிஐ அதிகாரிகள் ரபேஃல் விமானம் தொடர்பான கேள்விகளை எழுப்பத் தொடங்கிவிட்டனர், அதன் எதிரொலிதான், கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது போன்ற பல குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர், ஆளும் மத்திய அரசு மீது அடுக்கிக்கொண்டே செல்கின்றனர். சிபிஐ அதிகாரிகள் மோதல் விவகாரம் தொடர்பாக, நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகத்தின் முன்பு நாளை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், 'லஞ்சப் புகார் தொடர்பாக சிபிஐ அதிகாரி வர்மா விசாரணைக்குச் சரியாக பதில் கூறவில்லை' என லஞ்ச ஒழிப்புத் துறையினர் புகார் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது, அவரின் நடத்தை விசாரணைக்கு ஒத்துழைக்காமலும் இணக்கமற்ற முறையிலும் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.