Published:Updated:

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 35 மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய-  மாநில அரசுகளை வலியுறுத்தி இன்று மீனவர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் ஏப்ரல் 6ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். இதில், 6 படகுகளை சேர்ந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் சிறையில் அடைத்தனர்.
 

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்

மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை வரும் 26ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

##~~##
இதற்கிடையில்  சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், இரண்டு வருடங்களுக்கு முன்பு அபின் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களையும் சேர்த்து 35 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு மத்திய-  மாநில அரசுகளை வலியுறுத்தி இன்று மீனவர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்

வரும் 26ஆம் தேதிக்குகள் மீனவர்களை விடுதலை செய்யாத  பட்சத்தில் 27ஆம் தேதி மீனவர்களை திரட்டி மாபெரும் சாலை மறியல் செய்ய இருப்பதாகவும், மீன்பிடி தடைகாலம் முடிந்தாலும் மீன் பிடிக்க செல்ல மாட்டோம் என்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் கூறினர்.

படங்கள்: உ.பாண்டி