Published:Updated:

`ஈழத் தமிழர்கள் அன்றே அச்சம் தெரிவித்தனர்’ - ராஜபக்சே குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன்!

`ஈழத் தமிழர்கள் அன்றே அச்சம் தெரிவித்தனர்’ - ராஜபக்சே குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன்!
News
`ஈழத் தமிழர்கள் அன்றே அச்சம் தெரிவித்தனர்’ - ராஜபக்சே குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன்!

`ஈழத் தமிழர்கள் அன்றே அச்சம் தெரிவித்தனர்’ - ராஜபக்சே குறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன்!

முன்னாள் அதிபர் ராஜபக்சே மீண்டும் ஆட்சிக்கு வருவார் என இலங்கை தமிழ் மக்கள் முன்னரே அச்சம் தெரிவித்து இருந்தனர். இதை, சில நாள்கள் முன்னதாகவே விகடன் தெரிவித்திருந்தது.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே அதிபர் சிறிசேனா முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ளார். ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான மகிந்த ராஜபக்சே, ஜனவரி மாதம் வரை அரசியலிலிருந்தே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில்தான் இருந்தார். இதன் பின் பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனிக் கட்சி ஆரம்பித்துப் போட்டியிட்ட ராஜபக்சே சுமார் 44 சதவிகித வாக்குகளுடன் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றினார். அன்று முதலே தீவிர அரசியலில் மீண்டும் ஈடுபட்டார். உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய அடுத்த மாதமே ரணில் மீது இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவந்தார். இந்தநிலையில் தான் இன்று ராஜபக்சே பிரதமராக்கப்பட்டுள்ளார். 

திடீரென பிரதமராக ராஜபக்சே பதவி பிரமாணம் செய்யப்பட்டுள்ளது இலங்கை அரசியலில் புதிய புயலாக மாறியுள்ளது. ரணிலுடனான தொடர் கருத்து வேறுபாடே இந்த மாற்றத்துக்குக் காரணம் என அதிபர் சிறிசேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிசேனாவின் நடவடிக்கையைத் தொடர்ந்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக ரணிலின் கட்சி அறிவித்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேநேரம், ``நான் தான் இலங்கையின் பிரதமர், சிறிசேனாவின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்" எனக் கூறியுள்ளார் ரணில். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், 106 எம்.பி-களைக் கொண்டுள்ளது ரணிலின் கட்சி. அவருக்கு ஆதரவாகத் தமிழ் அமைப்புகள் உள்ளன. அவரின் வாபஸால் தற்போது பெரும்பான்மை இல்லாத அரசாகவும் சிறிசேனா அரசு மாறியுள்ளது. 

இதற்கிடையே, இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும், ராஜபக்சே மீண்டும் ஆட்சிக்கு வருவார் எனவும் விகடன் அன்றே சொன்னது. சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞரும், மூத்த தி.மு.க தலைவருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மூலம் இந்தச் செய்தியை விகடன் சொன்னது. அதில், ``சமீபத்தில் இலங்கையில் நடந்த உள்ளாட்சித் ராஜபக்சேவின் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. இதையடுத்து ராஜபக்சே மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார் என ராதாகிருஷ்ணனிடம் தமிழ் மக்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். அதை தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கூறினார்." இதை அன்றே பதிவு செய்திருந்தது விகடன்.