Published:Updated:

சஞ்சய் தத்துக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் !

சஞ்சய் தத்துக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் !
சஞ்சய் தத்துக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் !
சஞ்சய் தத்துக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் !

மும்பை: தயாரிப்பாளரை மிரட்டிய வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு மும்பை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு அடுத்த பிரச்னை ஆரம்பித்துவிட்டது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்று சரண் அடைய ஒரு மாதம் அவகாசம் பெற்று தற்போது வெளியில் இருந்துவருகிறார் சஞ்சய் தத். தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிரா கவர்னருக்கு மனு செய்துள்ளார்.

இந்தநிலையில், சினிமா படத் தயாரிப்பாளர் ஷகில் என்பவரை மிரட்டியது தொடர்பான வழக்கில் திங்கட்கிழமை (22ம் தேதி) அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாதபடி கைது வாரண்டை மும்பை அந்தேரி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

2002ம் ஆண்டு சஞ்சய்தத் தன்னுடைய தயாரிப்பில் நடிப்பதாக கையெழுத்தானது. இதற்காக அவருக்கு மிப்பெரிய அளவில் பணம் அளிக்கப்பட்டது. ஆனால் வேறுகாரணங்களால் அந்தப் படத்தில் இருந்து சஞ்சய் தத் விலகிக்கொண்டார். பணத்தை திரும்பிகேட்டபோது

##~~##
தரமறுத்ததுடன், தன்னுடைய நிழல் உலக தொடர்பு மூலம் மிரட்டல் விடுத்தார். சஞ்சய் தத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஷகில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சஞ்சய் தத்துக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் சஞ்சய் தத் ஆஜராகாததைத் தொடர்ந்து அவருக்கு தற்போது ஜாமீனில் வெளிவரமுடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பித்து அந்தேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.