Published:Updated:

`மேல்முறையீடு கிடையாது; தேர்தலைச் சந்திக்க ரெடி' - 18 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ட்விஸ்ட்?

`மேல்முறையீடு கிடையாது; தேர்தலைச் சந்திக்க ரெடி' - 18 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ட்விஸ்ட்?
`மேல்முறையீடு கிடையாது; தேர்தலைச் சந்திக்க ரெடி' - 18 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ட்விஸ்ட்?

`தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டுள்ளோம்' என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். 

18 சட்ட மன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லும் என்ற மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தத் தீர்ப்பு டி.டி.வி தினகரன் தரப்புக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதினாலும், அவரின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து 18 எம்.எல்.ஏ-க்களும் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ``மேல்முறையீட்டில் எனக்கு உடன்பாடில்லை. 18 எம்.எல்.ஏ-க்களின் முடிவைப் பொறுத்து மேலும்முறையீடு செய்யப்படும்'' என டி.டி.வி தினகரன் அறிவித்திருந்தார்.

இதனால் தற்காப்பு நடவடிக்கையாக 18 எம்.எல்.ஏ-க்களும் மேல்முறையீடு செய்வதற்கு முன்னதாக சபாநாயகர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாகச் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலைச் சந்திக்க உள்ளனர். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி தினகரன், ``இந்த ஆட்சி எப்போதோ கவிழ வேண்டியது. ஆனால், எங்கள் எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்க வழக்கால் தான் அவர்களால் இவ்வளவு நாள்கள் காலம் தள்ள முடிந்தது. 

இனி மேல்முறையீடு என்ற பெயரில் இந்த ஆட்சிக்கு மறைமுகமாக உதவ விரும்பவில்லை. இதனாலேயே தான் எனக்கு மேல்முறையீட்டில் விருப்பமில்லை என்று கூறினேன். ஆனால், பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன். தொகுதி மக்களின் விருப்பப்படி தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானோர் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டனர். இன்னும் ஒரு சிலர் விரைவில் தங்கள் கருத்துகளைச் சொல்லவுள்ளனர். அதன்பிறகு அதிகாரபூர்வமாக தேர்தலைச் சந்திப்பது குறித்து அறிவிப்பேன். அநேகமாக வரும் 31-ம் தேதி அல்லது 1-ம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படும். அ.தி.மு.க இப்போது பலவீனமாக உள்ளது. அதனால்தான் கட்சியில் மீண்டும் இணையுமாறு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர். அ.தி.மு.க இப்போது வெறும் கூடுதான். அ.ம.மு.க-விடம் உயிரோட்டம் உள்ளது" எனத் தெரிவித்தார்.