Published:Updated:

``நான் மகானும் அல்ல... அவர் புனிதரும் இல்லை!" - கரூரில் முதல்வரைச் சாடிய தினகரன்!

``நான் மகானும் அல்ல... அவர் புனிதரும் இல்லை!" - கரூரில் முதல்வரைச் சாடிய தினகரன்!
``நான் மகானும் அல்ல... அவர் புனிதரும் இல்லை!" - கரூரில் முதல்வரைச் சாடிய தினகரன்!

``அனைத்து மீடியாக்களும் 360 டிகிரியில் என்னிடம் மட்டுமே கேள்வி கேட்கிறார்கள். ஏன் எடப்பாடி பழனிசாமியிடம் அப்படி கேட்பதில்லை" என்று அ.ம.மு.க கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பினார்.


18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்கிறார். கரூர் வந்த அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது,  ``உயர்நீதிமன்றம் முதல்வர் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில், 'சி.பி.ஐ விசாரணை தேவை' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டிய போது, 'மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை' என்று கூறிய முதல்வர், இன்று 'சி.பி.ஐ விசாரணை தேவையில்லை' என்று பல்டி அடிக்கிறார். அவரது ஆட்சியில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தியபோது, வாய்திறக்காத முதல்வர், தன்மீது சி.பி.ஐ விசாரணை என்றபோது மட்டும் எவ்வளவு பயப்படுகிறார் என்பது தெரிந்துள்ளது. இது ஒன்றே போதும், முறைகேடு நடந்துள்ளது உண்மை என்று தெரிந்துகொள்ள. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாட்டிக் கொண்டாலும் பரவாயில்லை, தான் தப்பித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார் முதல்வர்" என்றார்.
 

பின்னர் செய்தியாளர்கள், ``நேற்று தமிழக முதல்வர் பேட்டி கொடுக்கும்போது, 'டி.டி.வி தினகரன் ஒன்றும் மகான் அல்ல' என்று கூறியிருக்கிறாரே?' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ``நான் ஒன்றும் மகான் அல்ல, அதே நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒன்றும் புனிதர் அல்ல. ஒரு வீட்டில் கையை நனைத்தாலே நன்றி மறவாத தமிழர்களின் கலாசாரத்தில், யாரால், பதவிக்கு வந்தார்களோ, அவர்களையே மறந்தவர்கள்தாம் முதல்வரும், துணை முதல்வரும். என்னைப் பற்றிப் பேசும்போது மட்டும் முதல்வர் எமோஷன் ஆகி விடுகிறார். என் பெயரைக்கூட டி.டி.வி தினகரன் என்று கூறாமல், டி.டி.தினகரன் என்றே அழைக்கிறார். எடப்பாடி தன்னை புனிதர்ன்னு சொல்லிக்கிறான்னா, கரூரில் உள்ள போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இன்னொரு புனிதர் ஆவார். போக்குவரத்துத்துறை அதிக நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில், அவரது வீட்டு கல்யாணத்துக்கு ஒரு லட்சம் நபர்களை அழைத்து வந்து, ஆடம்பரமாக நடத்தி ஏதோ ஜமீன்தாரர் போல் தடபுடல் பண்ணி இருக்கிறார். 'செந்தில்பாலாஜி வெற்றி பெற்றாலோ, டெபாசிட் பெற்றாலோ நான் அரசியலை விட்டே விலகுகிறேன்'ன்னும் கூறியுள்ளார். அவர் ஏற்கெனவே செந்தில்பாலாஜியின் பின்னால் மஞ்சள் பை எடுத்துச் சுற்றியவர்தான். எல்லா மீடியாக்களும் 360 டிகிரி ஆங்கிளில் டி.டி.வி தினகரன் ஆகிய என்னை மட்டும் கேள்வி கேட்கிறார்கள். ஏன் முதல்வரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை?. தேர்தலைச் சந்திக்க 100 சதவிகிதம் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தயாராக உள்ளது" என்றார்.