வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (30/10/2018)

கடைசி தொடர்பு:21:10 (30/10/2018)

“என்னை நீக்கும் முன்பு அவரை நீக்க வேண்டும்?” - காங்கிரஸ் தலைமைக்கு ஷாக் கொடுத்த கராத்தே

கராத்தே தியாகராஜன்

காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் கரேத்தே தியாகராஜன் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியில் கராத்தே தியாகராஜன் இணைந்துவிடுவார் என்றெல்லாம் காங்கிரஸ் கூடாரத்தில் செய்திகள் கசிந்து வருகிறது. கராத்தே தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்கள் மாநிலக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரிடம் வலியுறுத்திவருகிறார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கராத்தே தியாகராஜனிடம் பேசியபோது, ``ரஜினிகாந்த்தைப் பார்ப்பதற்காக நீக்குவார்கள் என்றால் தமிழக காங்கிரஸ் தலைவர்கூடத்தான் ரஜினிகாந்த்தை சந்தித்தார், அதற்காக அவரை நீக்கிவிட முடியுமா?

கட்சி உறுப்பினர் ஒருவரை நீக்குவதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கிறது. இன்னாரை அடிக்கடி சந்திக்கிறார் என்பதற்கெல்லாம் நீக்கிவிட முடியாது" என்றார். தான் மட்டும் ரஜினியை சந்திக்கவில்லை, திருநாவுக்கரசரும் சந்தித்துள்ளார் என்று சொல்லி திருநாவுக்கரசருக்குக் கராத்தே தியாகராஜன் செக் வைத்திருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.