Published:Updated:

மதப்பூசலை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை: ஜெயலலிதா எச்சரிக்கை

மதப்பூசலை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை: ஜெயலலிதா எச்சரிக்கை
மதப்பூசலை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை: ஜெயலலிதா எச்சரிக்கை
மதப்பூசலை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை: ஜெயலலிதா எச்சரிக்கை

சென்னை : "மதப்பூசலை தூண்டி விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் காவலர் மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் எம்.ஆறுமுகம் கோயம்புத்தூரில் மத சம்பந்தமான பதற்றம் நிலவுவதாக கூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, "கோயம்புத்தூரில் மதசம்பந்தமான பூசல்கள் ஏதுமில்லை. இரு மத்தினரிடையே அவ்வப்போது எழும் சிறு சிறு பிரச்னைகள் குறித்து காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையாளர் இரு மதத்தினரையும் அழைத்து அமைதிக் கூட்டங்கள் நடத்தி அமைதிக் குழுக்களை ஏற்படுத்தி மத நல்லிணக்கம் தொடர தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மத பூசல்களை தூண்டிவிடுவோர் மீதும், ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

பைன் பியூச்சர் கம்பெனி மோசடி குறித்து உறுப்பினர் ஆறுமுகம் பேசியதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, ‘இது சம்பந்தமாக பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதன் நிர்வாகிகள் செந்தில்குமார், விவேக் மற்றும் நித்யானந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டு இதுவரை 65 கோடி மதிப்புள்ள மோசடி சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வழக்கில் விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என்றார்.

##~~##
எட்வின்ராஜ் கொலை வழக்கு குறித்து உறுப்பினர் எஸ்.ஜாண் ஜேக்கப் பேசியதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, ‘மாநில குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையினர் புலன்விசாரணையை முடித்து, மாதிரி இறுதி அறிக்கையை தயார் செய்துள்ளனர். அரசு வழக்கறிஞரின் கருத்துரு பெற்று காவல்துறையினர் இவ்வழக்கில் எதிரிகள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தக்கல் செய்யவுள்ளனர்’ என்றார்.
காவல் துறையினர் மாற்றம் குறித்து ஜாண் ஜேக்கப் பேசியதற்கு பதில் அளித்து பேசிய ஜெயலலிதா, ‘பொதுவாக காவலர்கள், தலைமை காவலர்கள் சொந்த மாவட்டங்களில் பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றனர்.
சொந்த ஊர் இருக்கும் காவல் நிலையத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுவதில்லை. உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சொந்த மாவட்டம் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நியமிக்கப்படுகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வந்தால், அவர்கள் நடவடிக்கைகள் கண்காணித்து பாரபட்சமாக நடப்பதாக தெரிய வந்தால் அவர்களை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்றார்.