பிரதமர் மோடியின் தலைமையில் பா.ஜ.க-வின் நான்கு ஆண்டு ஆட்சிக் காலம் முடிந்திருக்கிறது. இந்த நான்கு ஆண்டு களுக்கு நீங்கள் தரும் மதிப்பெண் என்ன என்று நாணயம் டிவிட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு சர்வே நடத்தினோம்.

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 9% பேர், 61-க்கு மேல் மதிப்பெண் அளித்திருக்கிறார்கள். இதேபோல, 40-60 மதிப்பெண்களை 11% பேர் மட்டுமே அளித்திருக்கிறார்கள். மோடியின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது என்று நினைப்பவர்கள் மிகக் குறைந்த அளவில் இருப்பதையே இது காட்டுகிறது.

ஆனால், 35 -க்கும்கீழ் மதிப்பெண் தந்தவர்களே மிக அதிகமாக அதாவது, 80% என்கிற அளவில் இருக்கிறது. பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி-யை நடைமுறைப்படுத்தியது என மத்திய அரசு எடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எல்லாம் தங்களைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகச் சாதாரண மக்கள் நினைப்பதால்தான், அதிகமானவர்கள் குறைந்த மதிப்பெண்களையே தந்திருக்கிறார்கள்.

தற்போது நிலவும் மனநிலையே மக்களிடம் அடுத்த ஓராண்டு காலத்துக்குப்பின்னும் நிலவினால், தமிழகத்தில் பா.ஜ.க பெறும் வாக்குகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உண்டு!

- ஏ.ஆர்.கே.