மதுரையில் மீண்டும் தொடங்கியதா தி.மு.க. பிரமுகர்கள் கைது படலம்?

மதுரையில் மீண்டும் தொடங்கியதா தி.மு.க. பிரமுகர்கள் கைது படலம்?

மதுரை: சிறிது காலம் இடைவெளி விட்டிருந்த காவல்துறையினர், மீண்டும் தி.மு.க பிரமுகர்களின் மீதான கைது நடவடிக்கையை துவக்கியுள்ளனர். ஆனால், கைதுக்கான காரணம் காமெடியாக உள்ளது என்பதுதான் அனைவரின் பேச்சாக உள்ளது.
அழகிரியின் முக்கிய தளபதிகளில் ஒருவர் எஸ்ஸார் கோபி. இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருந்தாலும், கடந்த தி.மு.க ஆட்சியின்போது சக்தி வாய்ந்த நபராக வலம் வந்தார். சமீபத்தில் நிகழ்ந்த பொட்டு சுரேஷின் கொலை வழக்கில் கூட, காவல்துறையின் விசாரணை வளையத்துக்குள் சென்று வந்தார். அவனியாபுரம் ஏரியாவில், இவரும், இவரது சகோதரர்களும் வச்சதுதான் சட்டம் என்ற நிலை இப்போதும் உள்ளது.
இந்த நிலையில்தான், எஸ்ஸார் கோபியின் தம்பியும், மாநகராட்சியின் 61வது வார்டு கவுன்சிலருமான போஸ் முத்தையாவை போலீஸ் கைது செய்துள்ளது. மேலும், எஸ்ஸார் கோபியையும், அவரது உறவினர் மகேந்திரன் என்பவரையும் தேடி வருகின்றனர்.
##~~## |
செ.சல்மான்