Published:Updated:

`மு.க.அழகிரியின் முன்னாள் ஆதரவாளர் படுகொலை!' - டீ குடிக்கச் சென்றபோது விபரீதம்

அருண் சின்னதுரை
`மு.க.அழகிரியின் முன்னாள் ஆதரவாளர் படுகொலை!' - டீ குடிக்கச் சென்றபோது விபரீதம்
`மு.க.அழகிரியின் முன்னாள் ஆதரவாளர் படுகொலை!' - டீ குடிக்கச் சென்றபோது விபரீதம்

மு.க.அழகிரியின் முன்னாள் ஆதரவாளர் மதுரையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாளபட்டி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் வீரன். அழகிரியின் உண்மை விசுவாசியாக இருந்து அழகிரிக்கு ஆதரவாக கிராமப் பகுதியில் உள்ள தொண்டர்களைத் திரட்டி கூட்டம் காட்டி அழகிரியிடம் நல்ல மதிப்பை பெற்றுவந்தார். இதனால் இவரது குடும்ப விசேஷங்களுக்கு அழகிரி கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகிரியிடமிருந்து பிரிந்து தி.மு.க-வில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், இவருக்கு சில தவறான பெண்கள் நட்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சர்ச்சைகள் கிளம்பிய சமயத்தில், இன்று அதிகாலை வீரன் டீ குடிக்க வீட்டிலிருந்து வெளியே  கிளம்பியபோது அவரது தெரு முனையில் 5 பேர் கொண்ட கும்பல் அவரை மறித்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த வீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக  பாலமேடு பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கொலைக் கும்பல் வீரனின் உறவினர்கள் என்று தகவல் தெரிவிக்கிறது.