Published:Updated:

`பா.ஜ.க ஆபத்தான கட்சியா?’ - ரஜினி பதில்

சத்யா கோபாலன்
`பா.ஜ.க ஆபத்தான கட்சியா?’ - ரஜினி பதில்
`பா.ஜ.க ஆபத்தான கட்சியா?’ - ரஜினி பதில்

`பா.ஜ.க ஆபத்தான கட்சியா’ என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு நடிகர் ரஜினி பதிலளித்துள்ளார். 

`பா.ஜ.க ஆபத்தான கட்சியா?’ - ரஜினி பதில்

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சியை அறிவிக்கப்போவதாகக் கூறிவருகிறார். முன்னதாக, தன் ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அதில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். `2.0’, `பேட்ட' போன்ற படங்களிலும் மறுபுறம் தன் அரசியல் தொடர்பான வேளைகளிலும் கவனம் செலுத்திவருகிறார். அவ்வப்போது தன் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை, செய்தியாளர்கள் சந்திப்பு என பிஸியாக உள்ளார். இந்நிலையில் இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. 

``ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதே... உங்கள் கருத்து?’’ 

``இந்த விஷயத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. இப்போதுதான் நான் வருகிறேன்.’’ 

``தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையால் சிறுமிகள் உயிரிழக்கின்றனர்?’’ 

``இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தக்க தண்டனை விதிக்க வேண்டும். இதற்குக் கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும். மேலும், அதை விரைவில் அமல்படுத்தி செயல்படுத்த வேண்டும்.’’ 

``பணமதிப்பிழப்பு நடைமுறை கொண்டுவந்து இரண்டு வருடங்களாவது குறித்து உங்கள் கருத்து?’’ 

``பண மதிப்பிழப்பு நடவடிக்கையை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை.’’ 

``பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பலர் ஒன்று சேர்கின்றனர். அந்தளவு அது ஆபத்தான கட்சியா?’’ 

``அது ஆபத்து என அவர்கள் நினைக்கிறார்கள். அப்படியென்றால் அது ஆபத்துதானே!’’