Published:Updated:

`4 மாகாணங்களையே நிர்வகிக்க முடியல; பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் தேவையில்லை!’ - சர்ச்சையில் அஃப்ரிடி

`4 மாகாணங்களையே நிர்வகிக்க முடியல; பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் தேவையில்லை!’ - சர்ச்சையில் அஃப்ரிடி
`4 மாகாணங்களையே நிர்வகிக்க முடியல; பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் தேவையில்லை!’ - சர்ச்சையில் அஃப்ரிடி

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அதிரடியான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.  

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அஃப்ரிடி. கிரிக்கெட்டில் மட்டுமல்ல, அரசியல் குறித்தும் அதிரடியாகப் பல கருத்துகளைத் தெரிவிப்பவர். தற்போது அவர் தெரிவித்துள்ள கருத்து, பாகிஸ்தான் மட்டுமல்லாது இந்தியாவிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மாணவர்களிடையே பேசிய அஃப்ரிடி,``என்னைப் பொறுத்தவரையில், பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் தேவையில்லை. அதேநேரத்தில் காஷ்மீரை இந்தியாவுக்கும் தர வேண்டாம். காஷ்மீர் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். குறைந்தபட்சம் மனிதமாவது உயிருடன் இருக்கட்டும். நிச்சயமாகப் பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. இங்கு இருக்கும் 4 மாகாணங்களையே பாகிஸ்தானால் முறையாகப் பராமரிக்க முடியவில்லை. எந்த சமூகத்தில் மரணம் நிகழ்ந்தாலும் அது வலி தரக்கூடியதுதான்” என்றார். 

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்திலே, காஷ்மீரில் நிலவும் சூழல் தனக்குக் கவலை அளிப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஐ.நா சபை தலையிட வேண்டும் எனக் கருத்து தெரிவித்திருந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக உள்ள இநிலையில், கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடியின் இந்தக் கருத்து அந்நாட்டில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.